அந்த படத்தில் விஜயகாந்த் நடித்தே முடித்துவிட்டார்.! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த படக்குழு.!
சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி - கமலுக்கு நிகராக வளர்ந்து நின்றவர் நடிகர் விஜயகாந்த். ஒரு வருடத்தில் அதிகமாக கதாநாயகனாக நடித்தவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு. ஒரு வருடத்தில் அதிக ஹிட் கொடுத்த நடிகர் என்கின்ற பெருமை உண்டு.
சினிமாவில் வந்த புகழை கொண்டு அரசியலில் நுழைந்தார் பின்னர் சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கிவிட்டார். அதன் பின்னர், உடல் நல குறைவு ஏற்பட்டு பொதுவெளியில் வருவதையே தவிர்த்துவிட்டார். எப்போது கேப்டன் விஜயகாந்த் மீண்டும் புத்துயிர் பெற்று வருவார் என ரசிகர்கள் ஏங்கி கொண்டிருந்தவர்
அந்த வேளையில் தான், விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் எனும் படத்தில் விஜயகாந்த் ஒரு காட்சியில் வருகிறார் என கூறப்பட்டு வந்தது. அது உண்மைதானா இல்லை வெறும் வந்தந்தியா என ரசிகர்கள் மிகவும் குழம்பி போய் இருந்தனர்.
இதையும் படியுங்களேன் - வாய்ப்பு கொடுத்த தனுஷுக்கே இந்த நிலைமையா.?! வெற்றிமாறன் கொடுத்த ஷாக் இதுதான்.!
அதன் பின்னர் விஜயகாந்த் மனைவி, பிரேமலதா விஜயகாந்த் அவர் படத்தில் நடிக்கவில்லை என கூறினார். இதனால், ரசிகர்களுக்கு குழப்பம் உண்டாயிற்று.
தற்போது வெளியான தகவலின் படி, மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் நடித்து முடித்துவிட்டார் என கூறப்படுகிறது. ஒரு நாள் தான் ஷூட்டிங், அதற்கு படக்குழுவில் இருந்து இயக்குனர் விஜய் மில்டன் ஒளிப்பதிவாளர் மட்டும் சென்று படத்தை முடித்துவிட்டனர். என கூறப்படுகிறது. படம் வெளியானால் தான் தெரியும் கேப்டன் மீண்டும் திரையில் தோன்றியுள்ளாரா அல்லது இல்லையா என்பது.