நம்ம நினைச்சத அவன் சொல்லிட்டான்… இதனால் தான் விஜய் கம்முனு இருக்காரா? அடடே!

Vijay: சமூக வலைத்தளங்களை திறந்தாலே கேட்கும் முதல் பேராக இருப்பது விஜய் தான். தற்போது லியோ படத்தில் நடித்திருக்கும் விஜய் அதை தொடர்ந்து முழு நேர அரசியலில் இறங்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அவர் சினிமா கேரியரையும், அரசியல் எண்ட்ரியையும் காலி செய்யும் விதத்தில் ஒரு விஷயம் நடந்து இருக்கிறது.
சமீபத்தில் நடந்த காவிரி விஷயத்தில் சித்தா ப்ரோமோஷனுக்காக சென்ற சித்தார்த்தை சிலர் கோஷமிட்டு பாதியிலேயே வெளியேற்றினர். அதற்கு கன்னட பிரபலங்களே மன்னிப்பும் கேட்டனர். சிவராஜ்குமார் இனி இதுப்போல நடிக்காது என உறுதி அளித்து இருந்தார்.
இதையும் படிங்க: வெற்றிமாறனின் அடுத்த 7 படங்கள்!. தரமான சம்பவம் பண்ண காத்திருக்கும் தளபதி விஜய்…
அந்த நேரத்தில் விஜய் குரலில் சித்தார்த்துக்கு ஆதரவாக ஒரு ஆடியோ இணையத்தில் வைரலாகியது. என்னுடைய படங்களை இனி கர்நாடகாவில் வெளியிட மாட்டேன். இதையே திரும்ப திரும்ப செய்தால் 2026ல் கர்நாடகா மிகப்பெரிய விளைவுகளை சந்திக்கும் என அந்த ஆடியோவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த ஆடியோ பரவிய சில மணிநேரத்திலேயே விஜய் தரப்பில் இருந்து புஸ்ஸி ஆனந்த் அது விஜயுடைய குரல் இல்லை. முற்றிலும் பொய் என மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து விஜய் தரப்பு பெரிய அளவில் எடுத்து செல்லவில்லை.
இதையும் படிங்க: அடேய் இதுக்கு தானா அது… இரண்டாவது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 6 போட்டியாளர்கள்…
இதுகுறித்து விசாரித்த போது, விஜயும் இதே மனநிலையில் தான் இருந்தார். ஆனால் நேரடியாக சொன்னால் அது லியோ பட வசூலை பாதிக்கும். அதே நேரத்தில் தன்னுடைய அரசியல் எண்ட்ரியின் அஸ்திவாரத்தினை அசைத்து பார்க்கும் என்பதாலே அமைதியாக இருந்தார். இதையடுத்தே பரவிய அந்த ஆடியோவை பொய் எனக் கூறியதுடன் அவர் தரப்பு அமைதியாகியது.