பாரத்தை சுமந்து அமைதி காக்கும் விஜய்! வேறு வழியில்லாமல் அடிபணிந்த கமல் - பின்னனியை உடைத்த பிரபலம்
Actor Vijay: லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டதுதான் இப்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் காவல்துறை அதிகாரியான வரதராஜன் இதற்கு பின்னனியில் இருக்கும் காரணம் என்ன? யாரெல்லாம் இதை செய்கிறார்கள் என்பதை பற்றி தெளிவாக ஒரு பேட்டியில் கூறினார். அது பின்வருமாறு:
அதாவது இது முழுக்க முழுக்க அரசியல் காரணங்களால் ஏற்படும் அழுத்தம்தான் என்று கூறியிருக்கிறார். எப்போது சன் டிவி ஆரம்பித்தார்களோ அதிலிருந்து மற்ற சேனல்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். சேட்டிலைட் உரிமையை கொண்டு வந்து எல்லா படங்களையும் தங்களுக்கு விற்கும் மாதிரியான சூழலை உருவாக்கினார்கள்.
இதையும் படிங்க: மீசைய வளிச்சி விஜயகாந்த் படத்தில் வாய்ப்பு வாங்கிய சரத்குமார்!.. நாட்டாமை செம கில்லாடி!..
அப்படி தங்களிடம் விற்காத படங்களின் விமர்சனத்தை தங்கள் விமர்சன நிகழ்ச்சி மூலமாக ரேட்டிங்கில் கடைசியாக போட ஆரம்பித்தனர். முதலில் சுமங்கலி கேபிள் என்ற ஒன்றுதான் இருந்தது.
இவர்கள் கேபிள் ஆரம்பித்த பிறகு தனக்கு அடிபணியாத சேனல்கள் இருந்தால் அதை கடைசியில் தெரியும் விதம் செய்தனர். ராஜ் டிவி அதனாலேயே ஒடுக்கப்பட்டது. அதன் பிறகே ஜெயலலிதா அரசு கேபிள் என்ற திட்டத்தை அமல்படுத்தினார். 2ஜி ஊழல் மூலமாக வந்த பணத்தை சினிமாவில் முதலீடாக போட்டு நிறைய தியேட்டர்களை லீஸுக்கு எடுத்தார்கள்.
இதையும் படிங்க: எதிர்நீச்சல்: வெளிச்சத்துக்கு வந்த ஈஸ்வரியின் கல்லூரி வேலை…வாயை கொடுத்து கதிரிடம் வாங்கி கட்டும் ஜனனி…
இதன் மூலம் எந்தப் படம் ரிலீஸ் ஆனாலும் இவர்களிடம் வந்து அந்தப் படத்தை விற்றால்தான் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியும் என்ற நிலைமையை உருவாக்கினார்கள்.இதன் மூலம் வினியோகஸ்தரர்கள் காணாமல் போய்விட்டார்கள். ஆக வினியோகஸ்தரர்களுக்குள்ள லாபம், தியேட்டர்காரர்களுக்குள்ள லாபம் என எல்லாவற்றிற்கும் உலை வைத்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஆக்கிரமித்தது.
இதில் லலித் தனியாக சில தியேட்டரிக்கல் உரிமையை வைத்து தனக்கு எதிராக இருப்பதால் அவருடன் தொடர்புடைய படங்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்கள். அதன் மூலம் விஜய் இப்போது இவர்களுக்கு எதிரியாக காணப்படுகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் வந்த பீஸ்ட் படம் தோல்வியாக அமைந்தாலும் வசூலில் நல்ல லாபம் அடைந்தது.
சன்பிக்சர்ஸை பொறுத்தவரைக்கும் எந்தப் படம் தோல்விப்படமாக அமைகிறதோ மீண்டும் அதே நிறுவனத்திற்கு அந்த நடிகர் இன்னொரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் விஜயிடம் இன்னொரு படத்திற்காக சன்பிக்சர்ஸ் நிறுவனம் கேட்டிருக்கிறது. ஆனால் விஜய் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார்.
இதன் மூலம் எழுந்த கோபம்தான். சன்பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட், அரசியலில் விஜயின் வருகை என எல்லாமுமாக சேர்ந்து லியோ படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால்தான் கமல் இந்தப் பிரச்சினையே வேண்டாம் என 400 கோடி வசூல் அடைந்த விக்ரம் படத்திற்கு அவர்கள் கொடுத்த 80 கோடியை வாங்கிக் கொண்டு சரணாகதி அடைந்தார்.
இதையும் படிங்க: அட்லி எல்லாம் இப்போ தான்!.. அந்த காலத்துலயே விஜய்யை எப்படி ஏமாத்திருக்காங்க பாருங்க!..
அஜித், ரஜினிக்கும் இதெல்லாம் தெரியும். ஆனால் அவர்கள் தெரிந்தும் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் விஜய் இப்போது அரசியலுக்கு வர இருப்பதால் அரசியலிலும் தனக்கு போட்டியாக இருப்பார் எனக் கருதியே அவருக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் இதையெல்லாம் சொல்லமுடியாமல்தான் விஜய் அமைதியாக இருக்கிறார். அதையும் மீறி எதாவது பேசினால் நாளைக்கு பட ரிலீஸுக்கே பிரச்சினை பண்ணுவார்கள். அதனால் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தரர்கள் இவர்களுக்கு பெரும் பிரச்சினை ஏற்படும் எனக் கருதியே பொறுத்துக் கொண்டிருக்கிறார் என அந்த போலீஸ் அதிகாரி வரதராஜன் கூறினார்.