என்னடா இது ’மாமன்னன்’ மினி வெர்ஷனா இருக்கே?.. உறியடி விஜயகுமாரின் ‘எலக்‌சன்’ டிரெய்லர் ரிலீஸ்!..

உறியடி படத்தின் மூலம் இயக்குனராகவும் ஹீரோவாகவும் அறிமுகமானவர் விஜயகுமார். கடந்த ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ராணி விஜயகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ள எலக்சன் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட ஃபைட் கிளப் படத்திலும் ஹீரோ இவர்தான். சேத்து மான் படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள எலக்சன் படத்தின் டிரெய்லரில் தேர்தல் குறித்த பல்வேறு விஷயங்கள் படமாக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சும்மா தளதளன்னு தக்காளிப் பழம் போல இருக்க!.. சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் வாணி போஜன்!..

தமிழ் இயக்கத்தில் விஜய் குமார், ப்ரீத்தி அஸ்ரணி, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள எலக்சன் திரைப்படத்தில் சாதாரண தொண்டனான ஜார்ஜ் மரியன் மகனான ஹீரோ எப்படி தேர்தலில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதையாக உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்த மாமன்னன் படத்தின் கதையை அப்படியே மினிமல் பட்ஜெட்டில் எடுத்தது போலத்தான் உள்ளது.

இதையும் படிங்க: ஆறடி அர்னால்டை அண்ணாச்சி ஆக்கிட்டீங்களேடா!.. துஷாரா விஜயனுடன் தூள் கிளப்புறாரே சியான் விக்ரம்!..

பல்வேறு காட்சிகள் குறும்படம் போல டிரெய்லரிலேயே தெரியும் நிலையில், வரும் மே 17ம் தேதி வெளியாகவுள்ள இந்த எலக்சன் ரிசல்ட் இப்பவே தெரிவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் குமார் நடித்த உறியடி 2 மற்றும் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ஃபைட் கிளப் படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், இந்த படம் தேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Articles
Next Story
Share it