நல்ல வேளை தப்பிச்சிட்டாங்க.! குஷி படத்தில் விஜய்க்கு பதிலா யார் நடிக்க இருந்தது தெரியுமா?!
தமிழ் சினிமாவில் போட்டியாளராக இருக்கும் இரு நடிகர்களை வைத்து இயக்கிய முதல் இரண்டு படங்களையுமே மாபெரும் வெற்றி திரைப்படங்களாக இயக்கிய இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா தான். முதல் திரைப்படமான வாலி அஜித்திற்கு ஓர் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது என்றால் அடுத்த திரைப்படமான குஷி விஜய்க்கு மற்றுமொரு பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.
எஸ்.ஜே.சூர்யா பாரதிராஜாவின் தீவிர ரசிகன். அவரிடம் உதவி இயக்குனராக ஆசைப்பட்டு பல முறை எஸ்.ஜே.சூர்யா முயற்சி செய்து அதில் தோல்வி ஏற்றுள்ளார். ஒருமுறை அவரிடம் கதை சொல்லும் வாய்ப்பு விஜய் சூர்யாவுக்கு கிடைத்துள்ளது.
அப்போது அவர் இயக்குனர் பாரதிராஜாவிடம் கூறிய கதை தான் குஷி. அந்த கதை பாரதிராஜாவுக்கு பிடித்துப்போகவே, தனது மகன் மனோஜ் பாரதியை அதில் ஹீரோவாக வைத்து படத்தை தானே தயாரித்து அறிமுகப்படுத்திவிடலாம் என எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசி உள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். பிறகு அந்த கதையை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் கொடுத்த பிறகு அவர் இந்த கதையை படித்துவிட்டு இது வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். உடனே பாரதிராஜாவும் தயங்கியுள்ளார். பிறகு மனோஜ் பாரதி, தாஜ்மகால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார்.
இதையும் படியுங்களேன் - மாநாடு படத்தை காப்பி அடிக்கும் சிம்புவின் புதிய படக்குழு.! இந்த தடவை ஒர்கவுட் ஆகுமா.?!
அதன் பிறகுதான் எஸ்.ஜே.சூர்யா முதல் திரைப்படமாக அஜீத்தை வைத்து வாலி திரைப்படத்தை இயக்கிய முடித்தார். அதன்பிறகு குஷி திரைப்படம் விஜயை வைத்து எடுத்து முடித்து அதையும் சூப்பர் ஹிட் படமாக மாற்றி விட்டார்.
நல்லவேளை குஷி திரைப்படத்தில் மனோஜ் பாரதி நடிக்கவில்லை என்று தற்போது இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். அதனால், தான் குஷி எனும் எவர்க்ரீன் சூப்பர் ஹிட் திரைப்படம் விஜய்க்கு கிடைத்துள்ளது.