
Cinema News
அந்த படத்துல எப்படி நடிச்சீங்க..? யாரும் கேட்காத கேள்வியை விஜயிடம் கேட்ட பிரபல இயக்குனர்…!
தமிழ் திரையுலகமே கொண்டாடும் உன்னதமான நடிகராக முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா பயணத்தை ஆரம்பித்த நடிகர் விஜய் பல வெற்றிப் படங்களை கொடுத்து இன்று ஒட்டு மொத்த சினிமாவே பெருமையாக பேசும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.
இவரின் சினிமா கெரியரில் குறிப்பிட்ட சில படங்களை இன்றளவும் நம்மால் நினைவு கூர்ந்து பார்க்க முடியும்.அப்படி பட்ட படங்களில் வெற்றிகரமாக ஓடியும் நல்ல வரவேற்பையும் பெற்ற படமான ’குஷி’ படம். இந்த படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கினார். மேலும் நடிகை ஜோதிகா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
இந்த நிலையில் ஆரம்பகாலங்களில் விஜய் அஜித்தை வைத்து கமெர்ஷியலான ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமன் ஒரு சமயம் விஜயிடம் “ ஏன் விஜய் குஷி படத்துல நடிக்க ஒப்புக் கொண்டீர்கள்? கதையே இல்ல படத்துல. எப்படி நடிச்சீங்க ? என்று கேட்டாராம்.
அதற்கு விஜய் எஸ்.ஜே.சூர்யானு ஒருத்தர் இருக்கார் சார்.அவர் கதை சொல்லு விதமே வித்தியாசமாக இருக்கும். அதனால் தான் ஒப்புக் கொண்டேன். மேலும் அவரின் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கும் என கூறினாராம் விஜய். இதை ஒரு பேட்டியில் விஜயே தெரிவித்தார்.