சும்மா கிடங்கப்பா! வரலாற்றில் முத்திரை பதிச்சாச்சு – ‘லியோ’ படத்தால் விஜய் செய்த சாதனை

Published on: August 20, 2023
vijay
---Advertisement---

விஜயின் நடிப்பில் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. இந்தப் படத்தை லோகேஷ் இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.அவர்களுடன் இணைந்து அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஷ்கின் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இன்னும் படத்தில் பேட்ச் வேலைகள் மட்டும் இருப்பதால் படக்குழு காஷ்மீர் சென்று அந்த வேலைகளை முடிக்கத்திட்டமிட்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க : நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த கவின்!.. வைரலாகும் திருமண புகைப்படம்!…

மேலும் விஜயும் விடுமுறை பயணமாக வெளிநாடு சென்று சமீபத்தில் தான் சென்னை திரும்பியிருக்கிறார். லியோ பட வேலைகள் எல்லாம் முடிந்து விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் இணைந்து தனது 68 வது படத்தில் இணைய இருக்கிறார்.

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை எங்கு வைக்கலாம் என்ற ஆலோசனையில் இருந்தனர். ஆரம்பத்தில் இருந்தே சென்னையை தவிர்த்து வெளி ஊர்கள் அல்லது வெளி நாடுகளில் வைக்கலாம் என்ற முடிவிலேயே இருந்தனர்.

பெரும்பாலும் மதுரை , திருச்சி, கோவை போன்ற இடங்களில் பேச்சு வார்த்தையில் இருந்த போது திடீரென மலேசியா , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் மலேசியாவிலும் நடக்க வாய்ப்பில்லை என்று சமீபத்தில் ஒரு செய்தி உலா வந்தது.

இதையும் படிங்க : சிவாஜி படப்பிடிப்பில் ரஜினி செய்த வேலை!.. நெகிழ்ந்து போன நடன கலைஞர்கள்!…

இந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமான அறிவிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி மலேசியாவில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாம். லியோ படத்தின் மூலம் விஜயின் இசை வெளியீட்டு விழா வெளிநாட்டில் நடைபெறுவது இதுவே முதன் முறை என்ற வரலாறை தக்க வைத்திருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.