Connect with us
ajith

Cinema News

அஜித் ஓப்பனா சொன்னாரு!.. ஆனா விஜய்க்கு அந்த ஆசை இருக்கு!.. பிரபல நடிகர் பேட்டி..

தமிழ் சினிமாவில் ரஜினி-கமல் இவர்களுக்கு பிறகு சினிமாவே போற்றக்கூடிய நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் – விஜய். ரஜினி கமல் இவர்களுக்கு இருக்கிற மாஸ் , மரியாதை அதன் பிறகு அஜித் விஜய் இவர்களுக்கு மட்டுமே இருக்கின்றது. இதனடிப்படையில் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பிரச்சினை சமீபகாலமாக இருந்து கொண்டே வருகிறது.

ரஜினியை அப்படியே காப்பி அடிக்கிறார் விஜய் என்ற பேச்சும் ஒரு பக்கம் இருந்து வருகிறது. இதை பற்றி நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கூறினார் .அதாவது இந்தப் பிரச்சினையை வாரிசு மேடையில் முதலில் கொழுத்திப் போட்டதே சரத்குமார் தான் என்று கூறிய மீசை ராஜேந்திரன்,

அதே சரத்குமார் தான் மீனா 40 விழாவில் ரஜினியின் எண்ட்ரியை பார்த்து ரஜினி வந்ததும் ஒட்டுமொத்த இண்டஸ்டிரியே வந்த மாதிரி என மாற்றி பேசியிருக்கிறார் என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் சரத்குமார் அப்படி விஜயை சூப்பர் ஸ்டார் என்று சொன்னதும் கண்டிப்பாக விஜய் அந்த மேடையில் அதை எதிர்த்து பேசியிருக்க வேண்டும் எனவும் கூறினார.

மேலும் அஜித்தையும் சூப்பர் ஸ்டார் என்று பல ரசிகர்கள் இணையத்தில் சண்டை போட்டுக் கொண்டாலும் அஜித் எப்பவுமே அதை யாரை வைத்தும் மேடையில் சொல்ல சொன்னதில்லை. இந்த கருத்தை பார்க்கும் போது ஏதோ விஜய் தான் சரத்குமாரை மேடையில் தன்னை சூப்பர் ஸ்டார் என்று சொல்ல வைத்த மாதிரி பேசியிருக்கிறார்.

மேலும் அஜித் தன்னை தல என்றும் அல்டிமேட் ஸ்டார் என்றும் அழைக்கவேண்டாம், அஜித்குமார் அல்லது ஏகே என்றே அழைத்தால் போதும் என ஓப்பனாக கூறிவிட்டார். ஆனால் அதை போல ஒரு ஸ்டேட்மெண்டை இதுவரைக்கும் விஜய் கூற வில்லையே? இதிலிருந்து விஜய்க்கு தன்னை சூப்பர் ஸ்டார் என்று சொல்வது ஏற்புடையதாக இருக்கிறது போல தான் தெரிகிறது என்று மீசை ராஜேந்திரன் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top