Connect with us

Cinema News

அஜித் கூட அப்படி இல்லை… இதை செய்யாதீங்க.. கங்கை அமரனை லாக் செய்த விஜய்!… சந்தோஷம்டா யப்பா!

Gangai Amaran: இசையமைப்பாளர் கங்கை அமரன் தன்னுடைய மகனும், இயக்குனருமான வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் படம் குறித்தும், விஜய் குறித்தும் ஆச்சரியமான விஷயங்களை தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் படம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக வெங்கட் பிரபுவே அப்டேட் என்ற பெயரில் எக்ஸில் தன் படம் குறித்து போஸ்ட் போட்டுக்கொண்டே இருபபர்.

இதையும் படிங்க: திடீரென நடந்த விபத்து!.. அதையும் தாண்டி சாதித்து காட்டிய ஜனகராஜ்!.. எல்லாமே ஹிட்டு!…

ஆனால் அவரே சில நாட்களாக வாயை கட்டிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு அதே ரகத்தில் தான் தந்தை கங்கை அமரனும் கூட. அடிக்கடி சில தகவல்களை கசியவிட்டு விடுவார். அப்படி தான் அவருடைய சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்தும் கோட் குறித்தும் பேசி இருக்கிறார்.

அதில், வெங்கட் பிரபு மற்ற படங்களில் இப்படி ஓடியாடி உழைத்து நான் பார்த்தது இல்லை. இந்த படத்துக்காக அதிக கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கான். ஏன்டா இப்படி ஓடிட்டே இருக்கனு கேட்டா? படத்தில் கூட்டம் ஜாஸ்தியப்பா சமாளிக்கிறது கஷ்டம் தான் என்பான்.

இதையும் படிங்க: எல்லா படத்திலையும் செஞ்சாச்சு… இதுலையா மிஸ் பண்ணுவாரு.. விஜயின் பக்கா ப்ளான்!.

நான் வேண்டும் என்றால் உதவிக்கு வரவா எனக் கேட்க வேண்டாம் நீ வந்தால் என்னால் படப்பிடிப்பில் நிம்மாதியாக இருக்க கூடாது எனக் கூறிவிட்டான். கோட்டில் ஒரு பாடல் நான் எழுதி இருக்கேன். ஆனால் அது என்ன என்று கேட்க கூடாது. சஸ்பென்ஸாக இருக்க வேண்டும். விஜய் என்னுடைய பிறந்தநாளுக்கு கால் செய்து வாழ்த்து சொன்னார்.

மேலும், வெங்கட் பிரபு மற்றும் விஜய் படத்தினை பற்றி எதுவுமே வெளியில் பேசக்கூடாது எனக் கூறிவிட்டனர். இதில் அரசியல் பற்றி எந்த காட்சிகளும் இல்லை. அவர் இதுவரை என்னிடம் அரசியல் பற்றியெல்லாம் பேசவே இல்லை. அவர் நடிகராகவே என்னிடம் இதுவரை பேசினார் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top