சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் வருகிற தீபாவளி அதாவது நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
ஆனால், திரையரங்கில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பது நவம்பர் மாதமும் நீடிக்கும் எனத்தெரிகிறது. அதேபோல், ஓவர் சீஸ் எனப்படும் எனப்படும் வெளிநாட்டு வியாபாரம் பாதிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், இன்னும் பல நாடுகளில் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், கேரளாவிலும் தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை.
இதையும் படிங்க: அஜித்தின் மகன் இவ்ளோவ் வளர்ந்திட்டானா? ஆத்விக் யாருக்கு உம்மாஹ் கொடுக்கிறார்னு பாருங்க!
எனவே, திட்டமிட்டபடி அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸானால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு லாபத்தில் ரூ.15 கோடி நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்படுகிறது. இதை கணக்குப்போட்ட சன் பிக்சர்ஸ் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாமா என யோசித்து வந்தது.
ஆனால், பீஸ்ட் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டும் என விஜய் கறாராக இருக்கிறாராம். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது என்பதால் , அண்ணாத்த படத்தை தீபாவளிக்கே வெளியிடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.
எனவே, ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…