அங்க இங்கனு கடைசியா சூர்யாவுக்கே செக் வைத்த விஜய்! ‘வாடிவாசல்’ வந்த வாசல் வழியாவே போயிடும் போல!

by Rohini |
surya
X

surya

தமிழ் சினிமாவில் சூர்யா ஒரு பெருமை மிகு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிப்பையும் தாண்டி சமூக நலன்களை சார்ந்த பல செயல்களையும் செய்து கொண்டு வருகிறார். தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே அவரின் நடிப்பில் வாடிவாசல் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம். அதுமட்டுமில்லாமல் சுதா கொங்கரா தயாரிப்பிலும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் சூர்யா.

இதையும் படிங்க : சினிமால வாய்ப்பு இல்ல… தளராத பாலுமகேந்திரா… அவர் வழி தனி வழி தான் போங்கோ!

இதில் கங்குவா திரைப்படத்திற்கு பிறகு வாடிவாசலுக்குள் நுழைவாரா அல்லது சுதா கொங்கராவுடன் இணைவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருக்க சூர்யாவோ வெற்றிமாறனுக்காகத்தான் காத்திருக்கிறேன் என்ற வகையில் கூறினார்.

இதற்கிடையில் வெற்றிமாறனை அடிக்கடி விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் அடிக்கடி சந்தித்து வருவதாகவும் கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது. இதை பார்க்கும் போது ஏற்கனவே வெற்றிமாறன் விஜய்க்காக ஒரு கதை வைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். ஒரு வேளை அந்த விஷயம் சம்பந்தமாக விஜய் ரகசியமாக காய் நகர்த்துகிறாரோ என்றும் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் ஜெகதீஷ் விஜயின் மேனேஜர் என்பதையும் தாண்டி தயாரிப்பு பணியிலும் இறங்கியிருக்கிறாராம். அதனால் அவர் தயாரிப்பில் கூட வெற்றிமாறனை வைத்து ஒரு படத்தை இயக்க வைக்கலாம் என்ற யோசனையில் சந்தித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அழகிக்கு உயிர் கொடுக்க போராடிய தங்கர் பச்சான்!. மனுஷன் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?!..

எது எப்படியோ வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் அவரின் அரசியல் ஆசையை விட வேண்டியதுதான் என்று கூறுகிறார்கள். ஏனெனில் வெற்றிமாறனை பொறுத்தவரைக்கும் ஒரு படத்திற்காக அவர் எடுத்துக் கொள்ளும் காலம் என்பது விடுதலை படத்தை பார்த்தே கற்றுக் கொள்ளலாம். அந்தளவுக்கு கால்ஷீட்டை நீட்டிக் கொண்டே போவார். ஆனால் இது விஜய்க்கு சுத்தமாக செட் ஆகாது.

Next Story