படத்தை பார்த்து லெட்டர் போட்ட வெளிநாட்டு ரசிகை… கரம்பிடித்து மனைவியாக்கிக்கொண்ட விஜய்…

by Arun Prasad |
Vijay and Sangeetha
X

Vijay and Sangeetha

நடிகர் விஜய் நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களை எதிர்கொண்டு வந்திருக்கிறார். அவரது திரைப்படங்களை விமர்சித்த பத்திரிக்கைகள் விஜய்யை உருவகேலி செய்து மோசமாக எழுதிய சம்பவங்கள் எல்லாம் உண்டு. ஆனாலும் தனது நம்பிக்கையை விடாமல் ரசிகர்களின் இதயங்களில் குடியிருக்கும் இளைய தளபதியாக உயர்ந்தார் விஜய்.

Vijay

Vijay

அதன் பின் காதல், ஆக்சன், குடும்ப சென்டிமென்ட் போன்ற பல்வேறு சினிமா எலெமன்ட்டுகளால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார் விஜய். குறிப்பாக குழந்தைகளுக்கு விஜய்யை மிகவும் பிடித்துப்போனது. இவ்வாறு தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை அமைத்துக்கொண்ட விஜய், தற்போது ரசிகர்களின் தளபதியாக உயர்ந்திருக்கிறார்.

இவ்வாறு ரசிகர்களின் தளபதியாக உயர்ந்துள்ள நடிகர் விஜய், தற்போது மனைவியாக இருக்கும் சங்கீதாவை கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். விஜய் சங்கீதாவை திருமணம் செய்துகொண்ட கதை மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.

Vijay and Sangeetha

Vijay and Sangeetha

விஜய் திரைப்படங்கள் பலவற்றை பார்த்து விஜய்யை பிடித்துப்போன சங்கீதா தொடக்கத்தில் வெளிநாட்டில் இருந்து ரசிகை போலவே கடிதம் அனுப்பிக்கொண்டிருந்தார். இந்த கடிதப்போக்குவரத்து பின்னாளில் நெருக்கமான உறவாக மாறியிருக்கிறது. அதன் பின் ஒரு நாள் சங்கீதா விஜய்யிடம் “உங்களை சந்திக்கலாமா?” என கேட்டிருக்கிறார். அதற்கு விஜய்யும் ஒப்புக்கொள்ள இருவரும் சந்தித்திருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் சங்கீதா தனது தந்தையிடம் சென்று தான் நடிகர் விஜய்யை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும், அவர் வீட்டிற்குச் சென்று மாப்பிள்ளை கேளுங்கள் எனவும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஹிட் படத்தில் கல்லா கட்டிய பணம்… மூத்த நடிகரை வீட்டிற்கு அழைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரஜினிகாந்த்…

Vijay and Sangeetha

Vijay and Sangeetha

இதனை தொடர்ந்து ஒரு நாள் விஜய்யின் வீட்டிற்கு சங்கீதா தனது குடும்பத்துடன் சென்றிருக்கிறார். அப்போது சங்கீதாவின் தந்தை எஸ்.ஏ.சியிடம் “எனது பெண் விஜய்யை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறாள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என கேட்டிருக்கிறார்.

எஸ்.ஏ.சிக்கும் அவரது மனைவி ஷோபாவுக்கும் சங்கீதாவை பார்த்தவுடனே பிடித்துப்போய்விட்டதாம். அதன் பின் சில மாதங்களிலேயே சங்கீதாவும், விஜய்யும் திருமணம் செய்துகொண்டார்களாம்.

Next Story