Categories: Cinema News Entertainment News latest news

விஜயின் மாஸ் ஹிட் பாடலில் நடந்த ஆள் மாறாட்டம்… வாலி எழுதிய பாட்டுக்கு பதில் இன்னொரு பாட்டை வைத்த டாப் இயக்குனர்… ஷாக் தகவல்…

விஜய் என்றாலே அவரின் நடிப்பை போல அவரின் நடனத்துக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி விஜயின் ஒரு மாஸ் ஹிட் பாட்டில் நடந்த சூப்பர் ட்விஸ்ட் குறித்த முக்கிய தகவல்கள்.

விஜய் நடிப்பில் உருவான படம் யூத். இயக்குனர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த இப்படத்தின் பாடல்களும் இன்று வரை பெரிய ரீச்சாக இருக்கிறது. யூத் படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்த போது, வின்சென்ட் செல்வாவிற்கு உதவி இயக்குனராக மிஷ்மின் வேலை செய்து கொண்டிருந்தார். யூத் படத்திற்கு மணி சர்மா இசைமைத்து இருந்தார்.

vijay

அப்பொழுது எழுதப்பட்ட ஒரு பாட்டு மிஷ்கினுக்கு பிடிக்கவில்லை. இதை வின்சென்ட் செல்வாவிடம் சொல்லியும் விட்டார். அதற்கு அவரோ, டேய் இது வாலி எழுதுன பாட்டு. உனக்கோ முத படம். சும்மா இரேன்ப்பா என கூறியிருக்கிறார். இருந்தும் அடங்காத மிஷ்கின் தனது நண்பரை அழைத்து வந்து ஒரு பாடலை எழுதி தர கூறி இருக்கிறார்.

அப்பாடல் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிற்கு பிடித்தது. இருந்தும், வாலி பாடலை மாற்ற முடியுமா என கவலையில் மிஷ்கினின் நண்பர் எழுதி தந்த பாட்டை மாற்ற தயாரிப்பாளர் சம்மதிக்கவே இல்லையாம். இங்கு தான் ஒரு தில்லாலங்கடி வேலையை மிஷ்கின் செய்திருக்கிறார்.

பாடலை பாட ஷங்கர் மகாதேவன் வந்த போது வாலி எழுதிய பாட்டை எடுத்துவிட்டு தன் நண்பர் எழுதிய வரிகளை மிஷ்கின் மாற்றி வைத்துவிட்டார். பாடலின் ரிக்கார்ட்டிங்கும் முடிந்தது. யார் எழுதியது என்ற கண்டுபிடிக்க இசையமைப்பாளர் மணி சர்மாவால் முடியாது.

ஏனெனில், அவருக்கு தமிழ் தெரியாது. பாடல் மாற்றிய விஷயம் தெரியாமல் எல்லா பணிகளை முடித்து இயக்குனருக்கு பாட்டை போட்டுக் காட்டினாராம். அங்கு அனைவருக்கும் அதிர்ச்சியாகி விட்டது. வாலி எழுதிய பாட்டுக்கு பதில் இது இருந்தது. ஆனாலும் பாடலில் ஒரு பெப் இருப்பதை நம்பிய படக்குழு இதையே வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தனர். அந்த பாடல் தான் ஆள் தோட்ட பூபதி. அதை எழுதிய அந்த நண்பர் கபிலன் என்பது குறிப்பிடத்தக்கது.

kabilan

விஜய் ரசிகர்களின் ஹிட் லிஸ்ட்டில் கண்டிப்பாக இந்த பாடலுக்கு இடம் இல்லாமல் இருக்காது. எப்போதுமே ஹம் செய்யும் இந்த பாடல் உருவாக காரணம் மிஷ்கின் என்பது இன்று கூட பலருக்கு அறியாத செய்தி தான். இப்படி தான் உதவி இயக்குனராக இருக்கும் போது, தனக்கு பிடித்ததையே படப்பிடிப்பில் செய்த மிஷ்கின் இயக்குனராக என்னென்ன சேட்டை செய்வார் என நீங்களே யுகித்து கொள்ளுங்கள்.

Published by
Akhilan