இந்த படத்துல எனக்கு ஒன்னு சிக்குச்சு.. இனிமேல் இப்படித்தான்!.. மேடையில் ரசிகர்களை அலறவிட்ட விஜய்..
தமிழ் சினிமாவின் மிகப்பெரும் மாஸ் நடிகராக தன் அந்தஸ்தை நிலை நிறுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நடிகர் விஜய். நேற்று சென்னை நேரு ஸ்டேடியம் உள்விளையாட்டு அரங்கத்தில் வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்ச் விழா மிகப்பிரம்மாண்டமாக அரங்கேறியது. விஜய் ரசிகர்கள் படை சூழ மாஸ் என்ட்ரியாக நுழைந்தார்.
விஜய் வந்ததும் ரசிகர்கள் எப்பவும் போல தங்களின் ஆரவாரத்தை கூச்சலிட்டும் ஓலம் விட்டு அன்பை வெளிப்படுத்தினர். திரையுலகை சேர்ந்த பலரும் இந்த விழாவிற்கு வருகை புரிந்தனர். தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் தான் வாரிசு திரைப்படம்.
இதையும் படிங்க : உடல்நலமின்றி படுத்திருந்த கலைவாணர்… தலையணைக்கு அடியில் இருந்து வெளிவந்த பணம்!! யார் வந்தது தெரியுமா??
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் சரத்குமார்,பிரபு, பிரகாஷ்ராஜ், யோகிபாபு, சியாம், கணேஷ் வெங்கட்ராமன், சங்கீதா மற்றும் குஷ்பு பலர் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் ஒரு குடும்ப படமாக வெளியாக இருக்கிறது. படத்திற்கு இசை தமன்.
படம் வெளியாவதற்குள் பாடல்கள் வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கின்றன. அதுவும் ரஞ்சிதமே பாடல் 100மில்லியனுக்கு மேல் ரசிகர்களின் மனதில் நின்று ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நேற்று விழா மேடையில் ராஷ்மிகா இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ஜானியுடன் அந்த ஐகானிக் ஸ்டெப்பை போட மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள் கத்த ஆரம்பித்து விட்டனர்.
கடைசியாக பேசிய விஜய் எப்பவும் போல ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து விட்டு ரஞ்சிதமே பாடலில் வரும் அந்த முத்த ஸ்டைலில் ரசிகர்களுக்கு நாலா பக்கமும் முத்தங்களை பகிர்ந்தார். பகிர்ந்ததோடு இந்த பாட்டு மூலம் முத்தம் கொடுக்கிற ஸ்டைல் க்ளிக் ஆயிடுச்சு, இனிமேல் இந்த ஸ்டைல் தான் என்று சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.