என்னங்கடா விஜய் மாஸ்டர்...? தமிழ் சினிமாவின் மாஸ்டரே இவர் தானாம்...! புதுசா இருக்குல...!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும் பல நட்சத்திர பட்டாளங்களே இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை அடுத்து நடிகர் விஜய் லோகேஷுடன் இணைய இருக்கிறார். இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தான் ரசிகர்கள் மத்தியில் ஆவலாக இருக்கிறது. ஏற்கெனவெ இவர்கள் இணைந்த மாஸ்டர் திரைப்படம் பெரிய அளவில் வசூலை இறைத்தது.
அதிலிருந்தே விஜயை மாஸ்டர் என்றே சிலபேர் அழைத்தனர். ஆனால் இந்த மாஸ்டர் பெயர் என் பேரில் இருந்து தான் வந்தது என்று நிறைய பேர் சொன்னதாக நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்தார். ஏனெனில் இவர் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் வந்ததாகவும் ஆனால் அது நடக்காமல் ரவிக்குமாரிடம் அசிஸ்டெண்டாக சேர்ந்து நிறைய வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாராம்.
இதையும் படிங்கள் : அஜித்தின் திரையுலக நெருங்கிய நண்பன்…! தல-ய பத்தி எப்படி புட்டு புட்டு வைக்காருனு பாருங்க…
அதனாலயே இவரை தமிழ் சினிமாவின் மாஸ்டர் என்றே அழைப்பார்களாம். அதனால் இந்த மாஸ்டர் படம் வெளிவந்ததும் இவரிடம் எல்லாரும் உங்க பேரை தான் வைத்திருக்கிறார்கள் என்று சொன்னதாகவும் ரமேஷ் கண்ணா கூறினார்.