நேற்று மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் அது இசை வெளியீட்டு விழா என்பதையும் தாண்டி மனதை நெகிழ வைத்த ஒரு பிரிவு உபச்சார விழா மாதிரியே மாறியது. நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய் இன்று ஒரு மாபெரும் தாக்கத்தை மக்களிடம் உருவாக்கியிருக்கிறார்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன். பொங்கல் ரிலீஸாக இந்தப் படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. அந்த விழாவிற்கு விஜய் ‘என்னோட பாய்ஸ்’ என்று சொல்லக் கூடிய லோகேஷ், நெல்சன், அட்லீ போன்றோர் கலந்து கொண்டனர்.
பிரபுதேவாவின் அசத்தலான நடனம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக போக்கிரி பொங்கல் பாடலுக்கு பிரபுதேவா ஆட, மேடைக்கு கீழே அமர்ந்திருந்த விஜயும் எழுந்து நின்று நடனம் ஆடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். இதுமட்டுமில்ல, நிறைய விஷயங்கள் இந்த விழாவில் நடந்திருக்கிறது. யார் பெற்ற மகனோ என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் கோரஸாக பாட நீங்க என்ன ட்ரை பண்ணாலும் நான் அழ போறதில்ல என்று விஜய் கூறியது மேலும் ரசிகர்களுக்கு நம்பிக்கையை வர வழைத்தது.
இந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் மலேசியா அரசாங்கம் சில ரூல்ஸை போட்டது. எந்த ஒரு அரசியல் விஷயமும் பேசக் கூடாது, அரசியல் சம்பந்தப்பட்ட எந்த விஷயமும் உள்ளே இருக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனாலும் கூட்டத்தில் ரசிகர் ஒருவர் தவெக கட்சிக் கொடியை காட்ட அவரை குண்டுக்கட்டாக தூக்கி கொண்டு போனார்கள்.

ஆனால் இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயமும் நடந்தது. கட்சிக் கொடியைத்தானே காட்டக் கூடாது, இருந்தாலும் நாங்க வேறு மாதிரி அதை பிரதிபலிப்போம் என ஒரு டெக்னிக்கை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதாவது டிக்கெட் எடுத்து உள்ளே வருபவர்களுக்கு சிவப்பு நிற பேண்ட், மஞ்சள் நிற பேண்ட் கொடுத்துதான் உள்ளே அனுப்பியிருக்கிறார்கள்.
அவர்களை கொடியில் இருப்பது முதலில் சிவப்பு நிற பேண்ட் வரிசைப் படி உட்கார வைத்திருக்கிறார்கள். அதற்கு கீழ் வரிசையில் மஞ்சள் நிற பேண்ட், அதற்கு கீழ் மீண்டும் சிவப்பு நிற பேண்ட் என லைட்டிங்கில் காட்டும் போது தவெக கட்சி கொடியை பார்ப்பது போல் அமைந்தது.