‘கோட்’ படத்த்தின் ஷூட்டிங் இலங்கையில் நடக்குமா?!.. இடியாப்ப சிக்கலில் தளபதி விஜய்!..

Published on: January 22, 2024
vijay
---Advertisement---

goat vijay: விஜய் இப்போது நடித்து வரும் திரைப்படம் கோட். வெங்கட்பிரபு இயக்கி வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் மட்டுமில்லாமல் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் விஜய் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

ஏஜிங் டெக்னாலஜி மூலம் மகன் விஜயை மிகவும் இளமையாக காட்டவிருக்கிறார்கள். இதுவரைக்கும் விஜயை யாரும் இப்படி பார்த்திருக்க வாய்ப்பில்லை. 20 வயது விஜயாக இப்படத்தில் வரவிருக்கிறார் விஜய் என்பது அவரின் ரசிகர்களுக்கு விருந்துதான். இந்த படத்தில் சினேகா, மீனாட்சி சவுத்ரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் சங்கர் ராஜ இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இதையும் படிங்க: பொங்கல் ரேஸில் விஜய்க்கு புடிச்சது இந்த படம் தானாம்!.. ஸ்டன்ட் மாஸ்டர் சொன்ன சூப்பர் மேட்டர்!..

இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலேயே சென்னை, ராஜஸ்தான் என பல பகுதிகளிலும் எடுத்து வருகிறார்கள். அதேபோல், இலங்கை, சவுத் ஆப்பிரிக்கா, பேங்காக் என பல நாடுகளிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. குறிப்பாக இப்படத்தில் அதிரடி சண்டைக்காட்சிகளும் இடம்பெறவுள்ளது. இது கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட்தான்.

இப்படத்தின் இறுதிக்காட்சியை இலங்கையில் உள்ள ஒரு ஸ்டேடியத்தில் எடுக்க திட்டமிட்டிருக்கிறார் வெங்கட்பிரபு. சமீபத்தில் அங்கு சென்று படப்பிடிப்பு இடங்களை பார்த்து வந்தார். ஆனால், விஜய் அங்கு செல்வதில் சில பிரச்சனைகள் இருக்கிறது. அவரின் கத்தி படம் வெளியானபோதே படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என சொல்லி பிரச்சனை செய்தனர்.

இதையும் படிங்க: அயோத்திக்கு 10 பைசா கூட கொடுக்காத பிரபாஸ்!.. ஹனுமான் டீம் எத்தனை கோடி கொடுத்துருக்குன்னு பாருங்க!

ஒருபக்கம், பல வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு எதிராக நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் ‘இலங்கை எனும் நாடே இருக்கக் கூடாது’ என விஜய் பேசிய வீடியோவை சிங்களத்தில் சப் டைட்டில் போட்டு இப்போது வைரலாக்கி வருகின்றனர். ஒருபக்கம், விஜய் அங்கு சென்றால் கண்டிப்பாக இலங்கையை சேர்ந்த அரசியல்வாதிகள் அவரை சந்தித்து புகைப்படம் எடுப்பார்கள்.

அதன்மூலம் நாங்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல காட்டிக்கொள்வார்கள் என்பதுதான் கணக்கு. இதற்கு விஜய் இடம் கொடுப்பாரா இல்லை மறுப்பாரா என்பதும் தெரியவில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: கேப்டனை பிடிக்காதவங்கன்னு யாராவது இருந்தா அது இவங்கதான்! தலைவாசல் விஜய் சொன்ன ரகசியம்..

 

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.