ஐபிஎல் செலிபிரேஷன விட இது வேற லெவலில் இருக்கே… ’தி ரியல் கோட்’ விஜயின் செல்ஃபி கன்பார்மா?
Vijay: நடிகர் விஜயின் கோட் படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பை அவரின் ரசிகர்கள் திருவிழா மாதிரி மாற்றி இருக்கும் தகவல் தான் தற்போதைய சினிமா வட்டாரத்தில் பரபரப்பான விஷயமாக மாறி இருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜயுடன், சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். கல்பாத்தி எஸ் அகோரம் இப்படத்தினை தயாரிக்கிறது.
இதையும் படிங்க: இந்த பாட்டுல நான் நடிக்க மாட்டேன்!. அடம்பிடித்த எம்.ஜி.ஆர்.. பின்னாடி அவர் படம்னாலே அதுதான்!..
படத்தின் பாடல்கள் எல்லாம் இசையமைக்கப்பட்டுவிட்ட நிலையில், அதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தினை நெருங்கி இருக்கிறது. இதில் சில காட்சிகளின் படப்பிடிப்புக்காக படக்குழு கேரளா சென்று இருக்கிறது. விஜய் படத்தின் ஷூட்டிங் சில வருடம் கழித்து கேரளாவில் நடத்தப்படுகிறது.
இதனால் ரசிகர்கள் விஜயின் வருகையையே திருவிழா போல கொண்டாடினர். அதுமட்டுமல்லாமல், அவர் தங்கி இருக்கும் ஹோட்டலும் தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்களால் நிரம்பி வழிகிறது. அவர்களை அதிகாரப்பூர்வமாக இன்று மாலை விஜய் சந்திக்க இருப்பதாக அறிவித்தார். அதன்படி ரசிகர்கள் கூட்டம் விஜயை காண குவிந்துவிட்டனராம். அதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏறத்தாழ் ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர். அரசியல் எண்ட்ரியாக இருப்பதால் விஜய் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் செல்ஃபி எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறதாம். ஏற்கனவே நெய்வேலியில் அவர் எடுத்த செல்ஃபி மிகப்பெரிய அளவில் வைரலானது. அந்தவகையில், கேரளாவில் விஜய் எடுக்கப்போகும் அடுத்த செல்ஃபியும் சூப்பர்ஹிட்டாகும் வாய்ப்பு இருக்கிறது. நாளை விமான நிலையத்தில் நடக்கும் ஒரு ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு விஜய் சென்னை திரும்புவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரின் மாஸ் பட இயக்குனருக்கே பாடம் எடுத்த ராஜ்கிரண்… அதுவும் சூப்பர்ஹிட் படமா?