அஜித் வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டாரா விஜய்!.. திடீரென என்ன வேலை பார்த்துருக்காரு பாருங்க!..

விஜய் படம் குறித்து சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் அதிகம் பேசி டிரெண்டாக ஓடினால் உடனடியாக அஜித் தனது பட அப்டேட் வராமல் இருந்தால் கூட எப்போதோ எடுத்த ஒரு போட்டோவை வெளியிடுவார். ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பில் பல நாட்களாக விஜய் நடித்து வந்தாலும், இதுவரை ஒருமுறை கூட ரசிகர்களை அவர் சந்தித்தது போன்று புகைப்படங்கள் வெளியாகவில்லை.
ஆனால், கடந்த 3 நாட்களாக குட் பேட் அக்லி பிளாக்பஸ்டர் ஹாஷ்டேக் டிரெண்டாகி வரும் நிலையில், அது பொறுக்கமுடியாமல் தனது ரசிகர்களுக்காக ஜனநாயகன் ஷூட்டிங்கில் இருந்து தரிசனம் கொடுத்து டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார் விஜய்.

அஜித் மற்றும் விஜய் இருவருமே அந்த காலத்தில் இருந்து இப்போது வரைக்கும் இதே போட்டி விளையாட்டை விளையாடி கொண்டிருப்பது ரசிகர்களை எப்போதுமே தங்களுக்காக தக்க வைக்க மட்டும் தான் என்கின்றனர்.
கோட் படத்திற்காக நடிகர் விஜய் ஷூட்டிங் நடத்திய அதே லொகேஷனில் தான் தற்போது ஜன நாயகன் படத்துக்காகவும் அவர் நடித்து வருகிறார் என்பது இன்று ரசிகர்களை விஜய் சந்தித்த புகைப்படங்களை பார்த்தாலே தெரிகிறது.

கூடிய சீக்கிரமே ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிந்தாலும், அடுத்த ஆண்டு பொங்கலுக்குத்தான் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளையாவது ரசிகர்களுக்காக சீக்கிரம் விஜய் வெளியிடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.