”மெர்சல்” படம் குறித்து சர்ச்சை எழுப்பும் இயக்குனர்...! சரமாரியாக திட்டிய விஜய் ரசிகர்கள்....
தமிழில் இயக்குனராக அட்லீ அறிமுகமான படம் ராஜாராணி. அதன் பின் நடிகர் விஜய்யை வைத்து மெர்சல் படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யை ரசிகர்களிடம் மாஸான ஹீரோவாக கொண்டு போய் சேர்த்தது. இந்த படத்திற்கு பின் இயக்குனர் அட்லீ விஜய்யின் தீவிர ரசிகராக மாறினார். தற்போது ஹிந்தியில் ஷாரூக் கானை வைத்து படம் பண்ணிக்கொண்டிருக்கிறார்.
மெர்சல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிகில், தெறி போன்ற தொடர் வெற்றிப் படங்களை கொடுத்தார் அட்லீ. இந்த நிலையில் தமிழில் நடிகர் சிவா நடிப்பில் வெளியான ”தமிழ் படம்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிஎஸ். அமுதன். இவர் அண்மையில் ட்விட்டரில் மெர்சல் படத்தை பற்றியும் இயக்குனர் அட்லீயை பற்றியும் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை கேட்ட விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அவர் ரசிகர்களுடன் ட்விட்டர் உரையாடலில் தமிழில் சரியாக ரீமேக் செய்த படம் எது? என ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு சிஎஸ். அமுதன் விஜய் நடித்த மெர்சல் படம் என பதிலளித்தார். இதை பார்தத விஜய் ரசிகர்கள் கன்னாபின்னானு தகாத வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.
ஆரம்பத்தில் மெர்சல் படம் வெளிவந்த போது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள், இது கமல் நடித்த ”அபூர்வ சகோதரர்கள்” படத்தின் ரீமேக் என்று கூறிவந்த நிலையில் இது அபூர்வ சகோதரர்கள் படத்தின் உண்மையான ஸ்கிரிப்ட் இல்லை என கூறினார்கள் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் அமுதனின் இந்த கருத்துக்கு அட்லீயின் ரசிகர்கள் பெரும் அதிர்ப்திக்கு உள்ளாயினர்.