விஜயுடன் மீண்டும் இணைகிறாரா லோகேஷ் கனகராஜ்? - பரபர அப்டேட்

by சிவா |
vijay
X

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடிபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகவுள்ளது. இது விஜயின் 66வது திரைப்படமாகும்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. அப்படி எனில் யார் இயக்கத்தில் விஜய் முதலில் நடிப்பார் என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. தற்போது அதன் பின்னணி தெரியவந்துள்ளது.

vijay

மாஸ்டர் படத்திற்கு பின் கமல்ஹாசன், பஹத்பாசில், விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு முடிந்து ஒரு இடைவெளி கிடைத்ததால், விஜயை மரியாதை நிமித்தமாக சந்திக்க சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதை வைத்தே இப்படி கதை கட்டி விடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேநேரம், ஒரு வெற்றிப்படத்தில் இணைந்த இயக்குனரும், நடிகரும் மீண்டும் சந்தித்தால் மீண்டும் இணைவது பற்றி கண்டிப்பாக பேசியிருப்பார்கள் என்பதும் நம்பப்படுகிறது. எனவே, தளபதி 77 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜே இயக்கினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

Next Story