விஜய் தவறவிட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்கள்… ஜஸ்ட் மிஸ்…

சினிமாவில் மாஸ் நடிகர் என்ற அந்தஸ்த்தில் இருப்பவர்கள் தங்களுக்கு வரும் கதைகளை மிகவும் உஷாராக தேர்வு செய்வது வழக்கம். அந்த கதை நமக்கு செட் ஆகுமா? ஆகாதா? இதனை தனது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? மாட்டார்களா? என பல சந்தேகங்கள் எழும்.
“இந்த கதை நமக்கு சரிபட்டு வராது” என்று தோன்றினால் அந்த கதையை நிராகரித்துவிடுவார்கள். இதற்கு விஜய்யும் விதிவிலக்கு அல்ல. தமிழின் முன்னணி நடிகராகவும் பல கோடி ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருக்கும் மாஸ் நடிகராகவும் திகழும் விஜய், தனக்கு வந்த, ஆனால் சரிவராத பல திரைப்படங்களை நிராகரித்துள்ளார். அவ்வாறு அவர் நிராகரித்த படங்கள் பல பிளாக் பஸ்டர் வெற்றித்திரைப்படங்களாகவும் அமைந்திருக்கிறது. அப்படி விஜய் நிராகரித்து பிளாக் பஸ்டர் வெற்றித்திரைப்படங்களை நாம் பார்க்கலாம்.
உன்னை நினைத்து
சூர்யா, சினேகா, லைலா ஆகியோரின் நடிப்பில் வெளியான “உன்னை நினைத்து” திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இத்திரைப்படத்தில் முதலில் ஒப்பந்தம் ஆனது விஜய்தான். விஜய்யை வைத்து ஒரு பாடலையும் படமாக்கியிருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் விஜய் இத்திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.
முதல்வன்
அர்ஜூன் நடிப்பில் மாஸ் ஹிட் ஆன “முதல்வன்” திரைப்படத்தின் கதையை முதலில் விஜய்யிடம்தான் கூறியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். ஆனால் இந்த கதையை விஜய்யின் அப்பாவிடம்தான் ஷங்கர் கூறினார் எனவும் எஸ் ஏ சந்திரசேகர்தான் இத்திரைப்படம் தனது மகனுக்கு செட் ஆகாது என மறுத்துவிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். எனினும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
தூள்
விக்ரம் நடிப்பில் பக்காவான ஆக்சன் பிளாக்காக அமைந்த திரைப்படம் “தூள்”. இத்திரைப்படத்தின் கதையை கூறியபோது விஜய் “உங்களது அடுத்த திரைப்படத்தில் நான் நடிக்கிறேன்” என இயக்குனர் தரணியிடம் கூறியிருக்கிறார். அதன்படிதான் விஜய் தரணி இயக்கிய “கில்லி” திரைப்படத்தில் நடித்தாராம்.
சண்டக்கோழி
விஷால், ராஜ்கிரண் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த “சண்டக்கோழி” திரைப்படத்தின் கதையை முதலில் விஜய்யிடம்தான் கூறியிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் கதையில் ராஜ்கிரணின் கதாப்பாத்திரம் ஹீரோவை விடவும் வழுவாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டாராம் விஜய்.