Connect with us
vijay

Cinema News

அந்த நடிகருக்கு இவ்வளவு முக்கியத்துவமா?!. நான் நடிக்க மாட்டேன்!.. விஜய் மிஸ் செய்த சூப்பர் ஹிட் படம்!…

ஒரு திரைப்படம் உருவாவது ஒரு கதையில் இருந்துதான். கதைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ஒரு கதைதான் ஒரு ஹீரோவை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறது. எனவேதான், ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற இயக்குனர்கள் பலரிடமும் கதை கேட்டு அதில் ஒரு இயக்குனரை தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒரு கதையை ஒரு நடிகர் கேட்கும்போது அதில் தனது கதாபாத்திரம் எவ்வளவு முக்கியம் என பார்ப்பார். அதில், வேறு ஒரு நடிகர் இருக்கிறார் என தெரிந்து, அவரின் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருந்தால் ‘இதில் நான் நடிக்கவில்லை’ என சொல்லி விலகிவிடுவார். அதற்கு காரணம் தான் நடிக்கும் படங்களில் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

அப்படி நினைத்து ஒரு சூப்பர் ஹிட் படத்தை விஜய் மிஸ் செய்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கப் போகிறோம். தமிழ் சினிமாவில் ஆனந்தம் திரைப்படம் மூலம் இயக்குனர் ஆனவர் லிங்குசாமி. அடுத்த படமே மாதவனை வைத்து ரன் எனும் ஆக்‌ஷன் படத்தை எடுத்தார். அதன்பின் கார்த்தியை வைத்து பையா எனும் படத்தை எடுத்து ஹிட் கொடுத்தார்.

vishal

விஷாலை வைத்து லிங்குசாமி இயக்கிய திரைப்படம்தான் சண்டக்கோழி. இப்படத்தில் விஷாலின் அப்பாவாக ராஜ்கிரண் நடித்திருப்பார். அவரின் கதாபாத்திரத்திற்கு படத்தில் அதிக முக்கியத்துவம் இருக்கும். இந்த கதையை முதலில் விஜயிடம்தான் சொன்னார் லிங்குசாமி. கதையை மிகவும் ஆவலுடன் கேட்டிருக்கிறார்.

அதில், ராஜ்கிரண் வேடம் பற்றி லிங்குசாமி சொல்ல சொல்ல விஜய் ஏமாற்றமடைந்திருக்கிறார் ‘என் ரோல் ரொம்ப நல்லா இருக்கு. புகுந்து விளையாடலாம்னு இருந்தேன். ராஜ்கிரண் ரோல் சொல்லி என்ன இப்படி ஏமாத்தீட்டீங்களே. அவருக்குதான் அதிக முக்கியத்துவம் இருக்கு. நான் நடிக்கல’ என சொல்லி இருக்கிறார். இத்தனைக்கும், படத்தின் இரண்டாம் பாதியின் கதையை கூட விஜய் கேட்கவில்லை.

rajkiran

அதன்பின்னரே, அதில் விஷால் நடித்திருக்கிறார். படத்தை பார்த்த விஜய் லிங்குசாமியிடம் ‘நீங்கள் சொன்னதுதான் சரி. இந்த படத்துக்கு நீங்கள் அமைத்த திரைக்கதை சரிதான்’ என சொல்லி பாராட்டி இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top