More
Categories: Cinema History Cinema News latest news

அட நம்ம தளபதி இந்த மாஸ் படங்கள்ல மட்டும் நடிச்சிருந்தா!.. அவரு லெவலே வேற!.. வட போச்சே…

தமிழ்சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜயின் பெயருக்காகவே இன்று படங்கள் வசூலில் சாதனை படைத்து வருகின்றன. கதைத்தேர்வில் கவனமாக இருக்கும் தளபதி 5 சூப்பர்ஹிட் படங்களை; தவறவிட்டுப் புலம்பினாராம். அவை என்னென்ன என்று பார்ப்போமா…

தூள்

Advertising
Advertising

2003ல் இயக்குனர் தரணி தூள் படத்தின் கதையை விஜயிடம் சொன்னாராம். அப்போது இதில் தான் நடிக்கிற அளவு பெரிய ஸ்கோப் இல்லை என மறுத்தாராம் விஜய். விக்ரம் நடித்து வெளியானதும் தரணியிடம் விஜய் நீங்க எங்கிட்ட கதை சொன்னது வேற, ஆனா எடுத்தது வேற மாதிரி இருக்குன்னு சொன்னாராம். அதன்பிறகு 2004ல் அவரது இயக்கத்தில் கில்லியில் ஒப்பந்தமானாராம் விஜய். அது அவருக்கு வேற லெவல் வெற்றியைக் கொடுத்தது.

முதல்வன்

Muthalvan

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அர்ஜூன் கூட்டணியில் 1999ல் வெளிவந்த படம் முதல்வன். ஷ்கர் நடிக்கக் கேட்டபோது அதிகமாக அரசியல் உள்ளது. இதனால் பின்விளைவுகள் ஏற்படும் என்று பயந்த உதறித்தள்ளினாராம் தளபதி விஜய்.

ஆனால் காலத்தின் கட்டாயமோ என்னவோ, இவரே அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

சண்டக்கோழி

லிங்குசாமி இயக்கத்தில் 2005ல் விஷால் நடிப்பில் வெளியானது. காதல், ஆக்ஷன் இரண்டையும் சரியாகக் கலந்து கிராமத்து வாசனை வீச வெளியானது. முதல் பாதியை மட்டும் கேட்டுவிட்டு நடிக்க மறுத்தராம் விஜய். லிங்குசாமியின் கோபத்தைத் தணிக்க படத்தைப் பாராட்டினாராம் விஜய்.

சிங்கம்

ஹரியின் இயக்கத்தில் சிங்கம், வேல் படங்களை பல்வேறு காரணங்களால் தவிர்த்தாராம் விஜய். அது சூர்யாவுக்கு போய் 3 பாகங்களாக வெளியாகி சக்கை போடு போட்டது. சூர்யாவுக்கு நல்ல பெயரையும் வாங்கித் தந்தது.

தீனா

அஜீத்திற்கு தல என்ற பட்டத்தைக் கொடுத்தது இந்தப் படம் தான். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் முதலில் விஜயிடம் தான் கதை சொன்னாராம். அவர் மறுக்கவே, அது அஜீத்துக்குச் சென்றதாம். அந்த ஆண்டு வெளியான தீனா, ப்ரண்ட்ஸ் படங்களை ஒப்பிட, தீனாவே அதிக வசூல் பெற்று சாதனை படைத்தது.

Published by
sankaran v

Recent Posts