அங்க போய் உட்காந்து நோட்டம் விடும் விஜய்...! ஆடிப்போன படக்குழுவினர்...
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், நடிகர் ஷாம் உட்பட பலரும் இப்படத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்திற்கு முதன்முதலாக தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்க படத்தை பற்றியும் படத்தில் நடிக்கும் நடிகர்களை பற்றியும் புதுபுது தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
பாதி சூட்டிங் ஐதராபாத்திலும் பாதி சூட்டிங் சென்னையிலும் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். படத்தின் ஓபனிங் சாங் விஜய் பாடவிருப்பதாகவும் தகவல் கசிந்தது. படத்தின் ஒரு பாடல் காட்சி சென்னையில் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் விஜய்யின் செய்கையை பார்த்து படக்குழுவினர் ஆச்சரியத்தில் உள்ளனராம். அது ஒன்னுமில்ல பட சூட்டிங் முடிந்ததும் ஹீரோ ஹீரோயின்கள் பலபேர் கேரவேனுக்குள் போய் உட்கார்ந்து விடுவர். ஆனால் விஜய்யோ மதிய உணவுக்கு மட்டும் தான் கேரவேனில் போய் சாப்பிடுவாராம். மீதி நேரம் முழுவதும் செட்டில் நடக்கும் மற்ற சூட்டிங்கை போய் உட்கார்ந்து பாத்துக் கொண்டிருப்பாராம்.
இதை பார்த்த படக்குழுவினர் என்னப்பா எல்லாரும் ரெஸ்ட் எடுக்க போவாங்க இவரு என்னனா? சூட்டிங் எல்லாவற்றையும் உட்காந்து பார்த்துக் கொண்டிருக்கிறாரே என வியப்படைந்தனராம். மேலும் இன்னொரு தகவல் என்னவெனில் சரியாக மாலை 6 மணி ஆனதும் பேக் அப் பண்ணி போயிட்டே இருப்பாராம்.6.01, 6.02 என தாண்ட விட மாட்டாராம். 6 மணிக்கெல்லாம் கிளம்பி விடுவாராம். இதையெல்லாம் பார்த்த படக்குழுவினருக்கு வியப்பாக இருந்தது என திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.