விஜய் ரூம் ஃபுல்லா இந்த போஸ்டர்தான் இருக்கும்!.. சிறுவயது லூட்டியை சொன்ன ஆனந்த்ராஜ்!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்து விட்டு அடுத்ததாக லோகேஷுடன் இணைய இருக்கிறார். தற்போது தான் இந்த படத்தின் பூஜை போடப்பட்டு அதற்கான வேலைகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
மேலும் இரண்டு மாதங்கள் விடுமுறை பயணமாக விஜய் வெளிநாடு செல்ல இருப்பதால் அதன் பிறகே தளபதி - 67 படத்திற்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாக இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாபெரும் வளர்ச்சியில் விஜய் இருக்கிறார் என்றால் ஒரு பக்கம் அவரது தந்தை மற்றும் விஜயின் கடின உழைப்பும் காரணமாக இருக்கின்றது.
இதையும் படிங்க : போட்டோக்கு போஸ் கொடுக்கும்போது ரஜினி இதை செய்வார்!..இதற்கு இவ்வளவு சக்தியா?!…
குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் விஜய் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு ஒரு உச்சம் பெற்ற நடிகராக வளர்ந்து நிற்பார் என்று யாருமே நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். அப்பேற்பட்ட நிலையை அடைந்து உச்சத்தில் நிற்கிறார் விஜய்.
இந்த நிலையில் விஜயின் வளர்ச்சியை பற்றி நடிகர் ஆனந்தராஜ் ஒரு விஷயத்தை கூறினார். விஜய் சிறுவயதாக இருக்கும் போது சாலிகிராமத்தில் இருக்கும் அவரது வீட்டில் ஏராளமான சூட்டிங் எல்லாம் நடக்குமாம். அப்போது விஜயகாந்த் படத்திற்கான படப்பிடிப்பு விஜய் வீட்டில் நடந்த சமயம்.
அப்போது கேரவன்லாம் இல்லையாம். விஜய் வீட்டில் இருக்கும் அறைகளை தான் பயன்படுத்துவார்களாம். விஜயகாந்திற்கு ஒரு அறையை கொடுத்து விடுவார்களாம். ஆனந்த ராஜுக்கு விஜயின் அறையை கொடுத்திருக்கிறார்கள். அப்போது விஜய் சின்ன பையனாக இருப்பாராம். ஆனந்தராஜை பார்த்து ஹலோ அங்கிள் என்று சொல்லுவாராம் விஜய்.
அதன் பின் விஜயின் அறையில் புரூஸ்லி புகைப்படங்களின் போஸ்டர்களை தான் அதிகமாக ஒட்டி வைத்திருப்பாராம் விஜய். அவரின் விதவிதமான புகைப்படங்கள் ரூமில் இருக்குமாம். இதை இப்போது நினைக்கும் போது சிரிப்பாக வருகிறது என்றும் ஆனந்த ராஜ் தெரிவித்தார். மேலும் விஜயின் இமாலய வெற்றியை பார்க்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது என்றும் கூறினார்.