
Cinema News
அம்மாவிடம் உண்மையை ஒத்துக்கொண்ட தளபதி விஜய்.! ஒரு வீடியோ மூலம் எல்லாம் தெரிஞ்சிடுச்சி…
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார்.
படம் வெளியாவதற்கு முன்னர் திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. அதனை இன்னும் அதிகரிக்கும் வண்ணம், படத்தின் டிரைலர் அமைந்தது. அதனால் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், படம் திரையிட்ட பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்று கருத்துக்களே அதிகம் வெளியானது. இது குறித்து அண்மையில் ஒரு நேர்காணலில் விஜயின் அம்மா பாடகி சோபனா வெளிப்படையாக பேசி இருந்தார்.
அதாவது, அவர் எப்போதும் தனது மகன் விஜய் படத்தை முதல் நாள் முதல் காட்சி, சத்யம் திரையரங்கில் சென்று பார்த்து விடுவாராம். பார்த்துவிட்டு தனது மகனுக்கு போன் செய்து, அப்பட விமர்சனத்தை மனசு நோகாமல் கூறி விடுவாராம். அப்படித்தான் பீஸ்ட் படத்திற்கும் சத்யம் திரையரங்கில் பார்த்து விட்டு தனது மகன் விஜய்க்கு போன் செய்துள்ளார் ஷோபனா.
இதையும் படியுங்களேன் – மரியாதையா பேசலான கிழிச்சிருவேன்.! கோபத்தில் பொங்கிய ‘அட்ஜஸ்ட்மென்ட்’ சீரியல் நடிகை…
அப்போது படம் நல்ல பொழுது போக்காக உள்ளது. வேறு எதுவும் நான் கூறவில்லை. என்று கூறினாராம். அதற்கு விஜய், ‘ படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. 2,3 நாட்கள் சென்றால் படத்தின் உண்மையான நிலவரம் தெரியவரும்.’ என்று தனது படத்தை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளாராம் தளபதி விஜய். இதனை அந்த நேர்காணலில் தளபதியின் அம்மா சோபனா கூறியிருந்தார்.