தூக்கிட்டு வந்து நடிக்க வச்சாங்க .. விஜய் படத்தில் வலுக்கட்டாயமாக நடிக்க வைத்த நடிகை...!
2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ஃபிரெண்ட்ஸ் திரைப்படம். சித்திக் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தேவையாணி நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் சூர்யா, ரமேஷ் கண்ணா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
முழு காமெடி கலந்த கமெர்ஷியல் படமான ஃபிரெண்ட்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் அபிநயா என்ற நடிகையும் நடித்திருப்பார். தேவையாணிக்கு வில்லியாக இருக்கும் கதாபாத்திரமாக அதில் அமைந்திருக்கும்.
அடிப்படையில் டான்ஸரான இவர் இந்த படத்தில் நடிக்கும் போது இவருக்கு வயது 13 தானாம். ரோட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தெருவில் ஃபிரெண்ட்ஸ் படத்தின் டெக்னிஷியன்ஸ் ஒரு ஆஃபிஸ் வைத்திருந்தார்களாம். இவர் விளையாடிக் கொண்டிருக்கும் போது படக்குழு இவரை பார்த்துள்ளார்கள்.
உடனே இவர் வீட்டிற்கு போய் அபிநயா அம்மாவிடம் நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் அவரது அம்மா படிக்க வேண்டும் என்று எவ்ளவோ சொல்லியும் விடவில்லையாம். அது போக அபிநயாவிற்கும் நடிக்க ஆசையாம். அதனால் இவரது விருப்பத்தின் பேரில் நடிக்க வந்துள்ளார்.ஆனால் அதை இப்பொழுது நினைக்கும் போது மிகவும் வருத்தப்படுகிறார். ஒரு வேளை 18 அல்லது 20 வயதில் நடிக்க வந்திருந்தால் ஹீரோயினாக மாறியிருப்பேன் என்று கூறினார்.