Connect with us
Vijay

Cinema News

மிருகங்களின் பெயர்களை டைட்டிலாக கொண்ட விஜய் படங்கள்… எல்லாமே அட்டர் ஃப்ளாப் தெரியுமா?

விஜய் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வந்தாலும் அவரது கேரியரில் பல திரைப்படங்கள் மோசமான தோல்வி திரைப்படங்களாக அமைந்திருக்கின்றன. ஆனால் இதில் தற்செயலாக மிருகங்களின் பெயர்களை கொண்ட விஜய் திரைப்படங்கள் சொல்லி வைத்தார்போல் ஃப்ளாப் ஆகியுள்ளது. அவ்வாறு அட்டர் ஃப்ளாப் ஆன மிருகங்களின் பெயர்களை கொண்ட விஜய் திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்.

குருவி

கடந்த 2008 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் “குருவி”. உதயநிதி ஸ்டாலின் தயாரித்த முதல் திரைப்படம் இதுதான். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட் என்றாலும் படம் அட்டர் ஃப்ளாப் ஆனது. குறிப்பாக இதில் விஜய் வெகு தூரம் தாவும் காட்சி ரசிகர்களால் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது.

சுறா

கடந்த 2010 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் “சுறா”. இத்திரைப்படம் விஜய்யின் 50 ஆவது திரைப்படமாகும். ஆதலால் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இத்திரைப்படம் வெளியானது. ஆனால் இத்திரைப்படம் சொல்லமுடியாத அளவிற்கு தோல்வியை கண்டது. குறிப்பாக இதில் விஜய்யின் அறிமுக காட்சி ரசிகர்களால் கேலிக்குள்ளானது.

புலி

கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் மிக வித்தியாசமான கதைக்களத்தோடு வெளிவந்த திரைப்படம் “புலி”. இயக்குனர் சிம்புதேவன் ஒரு ஃபேண்டசி மற்றும் அட்வென்சர் வகையறாவில் இத்திரைப்படத்தை உருவாக்கி இருந்தார். விஜய்க்கும் இது போன்ற கதைக்களம் மிக புதிது. ஆதலால் இத்திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இத்திரைப்படம் படு தோல்வியடைந்தது.

பீஸ்ட்

கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படத்தை குறித்து நாம் தனியாக கூறத்தேவையில்லை. இத்திரைப்படம் கம்மெர்சியல் வெற்றியடைந்திருந்தாலும் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் பிடிக்காமல் போனது. இதனை தொடர்ந்து நெல்சனை நெட்டிசன்கள் கிண்டல் செய்யத்தொடங்கிவிட்டனர்.

தற்போது விஜய் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். லியோ என்றால் சிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top