டைரக்டர் பிரச்னையே முடிஞ்சிதானு தெரியலை… தயாரிப்பாளரும் பிரச்னையா? தளபதி69ல் என்ன தான் நடக்குது?

Thalapathy69: நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக உருவாக இருக்கும் திரைப்படம் தளபதி69. இப்படத்தின் இயக்குனர் பஞ்சாயத்தே பெரிய அளவில் சென்ற நிலையில் தற்போது தயாரிப்பாளர் பஞ்சாயத்து தொடங்கி இருக்கிறது. புதிய தயாரிப்பாளர் யாராக இருப்பார்கள் என்ற ஆச்சரிய தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தன்னுடைய 69வது படத்துடன் நடிப்பில் இருந்து விலக இருக்கிறார். அரசியல் பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொள்ள இருக்கிறார். இதனால் அவரின் கடைசி படம் குறித்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: நீங்க உருட்டுறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்… சிறகடிக்க ஆசையால் கோபத்தில் ரசிகர்கள்!…

இப்படத்தினை யார் இயக்க போகிறார் என்ற பேச்சுவார்த்தையே பல நாட்களாக நீடித்தது. தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர்களான வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லீ, நடிகர் ஆர்.ஜே பாலாஜி என பலரின் பெயர்கள் அடிப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் பெயரும் இடம்பெற்றது. கடைசியில் விஜயின் 69வது படத்தினை ஹெச்.வினோத் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து அரசியல் சார்ந்த கதையாக இப்படம் உருவாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதுக்குறித்து இன்னமும் முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நேரத்தில் தற்போது தயாரிப்பாளர் தரப்பிலும் பெரிய குழப்பம் நடந்து இருப்பதாக விஷயம் கசிந்துள்ளது. முதலில் விஜய் படத்தினை தயாரிக்க இருந்தது டிவிவி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தான்.

இதையும் படிங்க: சூர்யாவின் அடுத்த படத்துக்கு ஆஸ்கார் பட பிரபலமா?… விட்டத பிடிக்க செம ப்ளானா இருக்கே…

ஆனால் அவர்கள் தரப்பில் அறிவிப்பு வராமலே பெரிய வியாபாரம் தேடிக்கொண்டதால் விஜய் அதிருப்தி அடைந்தாராம். மேலும் சம்பளம் பிரச்னையும் உருவாக அவர்கள் இப்படத்தில் இருந்து விலகி இருக்கின்றனர். இந்நிலையில் விஜயின் 69வது படத்தினை டாக்ஸிக் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரோடக்‌ஷன் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

கிட்டத்தட்ட விஜயும் இவர்களுக்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் ஸ்கிரிப்ட் வேலைகளும் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் வேலைகள் ஆகஸ்ட் கடைசியில் தொடங்கி நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கோட் படத்தின் 80 சதவீத வேலைகள் விஜய் தரப்பு முடித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அடுத்த சம்மர் விடுமுறையில் ரிலீஸாக இருக்கும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story