அந்த விஜய் படம் பார்த்துட்டு அப்படி அழுதேன்!.. மாரி செல்வராஜ் இயக்குனராக மாறிய தருணம்!..

#image_title
Mari Selvaraj: இளம் இயக்குனர்கள் பலரும் விஜயின் ரசிகராக இருக்கிறார்கள். இப்போதுள்ள பல இளம் இயக்குனர்கள் சிறுவனாக இருக்கும்போதுதான் விஜய் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். விஜய் படம் பார்த்து வளர்ந்தவர்கள் இப்போது பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுத்து வருகிறார்கள்.
லோகேஷ் கனகராஜ், நெல்சன் என பலரையும் சொல்லலாம். இப்போது இந்த வரிசையில் மாரி செல்வராஜும் இணைந்திருக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர் சென்னை வந்து மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை ஓட்டி இருக்கிறார். பெட்ரோல் பங்க், கொத்தனார் வேலை என கிடைக்கும் வேலைகளை செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: நடிகையின் பாலியல் புகார்!.. ரியாஸ்கான் பதில் இதுதான்!.. கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல!…
அதன்பின்னரே இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக சேர்ந்து வேலை செய்திருக்கிறார். அதன்பின் பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். தனது வாழ்வில் தான் சந்தித்த அனுபவங்களை, அடக்குமுறைகளை கதையாக மாற்றி திரைப்படங்களாக உருவாக்கி வருகிறார்.
அப்படி இவர் இயக்கிய கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் விவாதங்களையும் துவக்கி வைத்தது. இப்போது அவரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாழை திரைப்படமும் ரசிகர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், மணிரத்னம், ஷங்கர், மிஷ்கின், பாலா, சுதா கொங்கரா உள்ளிட்ட பல இயக்குனர்களும் இப்படத்தை பாராட்டியுள்ளனர். தான் சிறுவனாக இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இப்படி படமெடுக்கும் மாரி செல்வராஜ் சிறுவனாக இருந்தபோது விஜயின் ரசிகராக இருந்தார் என்பது பலருக்கும் தெரியாது.

Poove unakaga
இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘விஜய் நடித்த பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற காதல் படங்களை பார்த்தே அவரின் ரசிகராக மாறினேன். பூவே உனக்காக படத்தில் விஜய் காதலிக்கும் பெண் அவரை கழட்டிவிட்டார் என என் நண்பர்கள் கிண்டலடித்தார்கள். ஆனால், நானோ அந்த காட்சியை பார்த்து கண்ணீர் விட்டேன். அப்போதுதான் எனக்குள் கலை உணர்வு இருப்பது எனக்கே தெரிந்தது’ என சொல்லி இருக்கிறார்.
விஜயை வைத்து படமெடுக்க ஆசைப்பட்ட மாரி சிலமுறை அவரை சந்தித்து சில கதைகளை சொல்லி இருக்கிறார். ஆனால், ‘இந்த கதையெல்லாம் எனக்கு செட் ஆகாது. என்னுடைய ரசிகனாக கதை எழுதிட்டு எங்கிட்ட வாங்க. கண்டிப்பா நடிக்கிறேன்’ என சொல்லி அனுப்பிவிட்டாராம்.
இதையும் படிங்க: சூர்யா படங்களில் நடக்கும் தொடர் பிரச்னைகள்… கோபத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள்…