Categories: Cinema History latest news tamil cinema gossips

விஜய் படத்தலைப்பு திடீர் மாற்றம்.!? எல்லாத்தும் காரணம் ஜி.வி.பிரகாஷாம்.! இந்த கதை தெரியுமா.?!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் முதன்முதலாக வெளியான திரைப்படம் தெறி. இந்த திரைப்படம் தான் துப்பாக்கி, கத்தி என மிக ஹிட் திரைப்படங்களும் கொடுத்த விஜய்க்கு அந்த வெற்றியை தக்க வைக்கும் வண்ணம் மீண்டும் ஒரு மெகா ஹிட் திரைப்படமாக தெறி திரைப்படம் அமைந்தது.

இந்த திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார். ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போதும் ரசிகர்களின் பேவரைட்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் வரை படத்தின் தலைப்பு எதுவென்ற ரசிகர்களுக்கு தெரியாது. ஆனால் முதலில் இந்த படத்திற்கு ‘தாறுமாறு’ எனும் தலைப்பு வைக்க படக்குழு தீர்மானத்து இருந்ததாம்.அதாவது அதுவும் லிஸ்டில் இருந்ததாம். அது இணையத்தில் கசிந்து விடவே ரசிகர்கள் தாறுமாறு என்ற தலைப்பை ட்ரெண்டாக்கி வந்தனர்.

அந்த சமயம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது இணையதள பக்கத்தில் கூட  தற்போது தளபதி விஜயின் தாறுமாறு படத்தின் பாடல்கள் தயாராகி வருகிறது. என்றவாறு ட்வீட் செய்து விட்டாராம். அதனை தொடர்ந்து தான் இந்த தலைப்பு பிரபலமாக தொடங்கியது.

இதையும் படியுங்களேன் –  கோடி ரூபாய் கொடுத்தாலும், இந்த விஷயத்தை செய்யவே மாட்டேன்.! அடம்பிடிக்கும் கார்த்தி.!

ரசிகர்களிடம் சஸ்பென்சாக தலைப்பை கூற நினைத்த படக்குழுவிற்கு இந்த விஷயம் சற்று ஏமாற்றமாக அமைந்ததாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து தான் இந்த படத்தின் தலைப்பு தெறி என வைக்கப்பட்டு, படத்தின் போஸ்டர் வெளியானதாம். இந்த தலைப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து, மெர்சல், பிகில், என இந்த கூட்டணி அடுத்தடுத்து மெகா ஹிட்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அட்லி – விஜய் கூட்டணி எப்போது இணையும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Published by
Manikandan