Cinema News
மகன் பேரை வில்லனுக்கு வைத்த விஜய்… அப்படி என்னதான் காண்டு?
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலுக்குள் இறங்கி விட்டார். அப்போது முதலே அனைவராலும் கவனிக்கப்பட வேண்டிய நபர் ஆகி விட்டார். சினிமாவைத் தாண்டி பலரும் அவருடைய செய்கைகளை
பிரச்சனை
விஜய் மகன் சஞ்சய் ஃபாலோ பண்ணலன்னு தான் சொல்றாங்க. ஆரம்பத்துல இருந்தே அப்படித்தான் இருக்காங்க. அவருக்கும், இவருக்கும் பிரச்சனை இருக்கு. அதான் பேசாம இருக்காங்கன்னு சொன்னாங்க. இதுக்கு முன்னாடி விஜய்க்கும், அப்பா எஸ்ஏசிக்கும் என்ன பிரச்சனை இருந்ததோ அதே மாதிரி தான் இவருக்கும் இருக்குன்னு சொல்றாங்க.
ஏதோ ஒரு பதிவு
Also read: அதானே இதுவும் அதான்… சூர்யா44 படத்தின் லீக்கான டைட்டில்… நல்லாவா இருக்கு?
பையனே அவரை ஃபாலோ பண்ணல. பேமிலி கூட கனெக்ட் ஆகலன்னு இருக்குறப்போ விஜய் எப்படி சமாளிப்பாருன்னு ஆங்கர் பிரபல வலைப்பேச்சாளர் அந்தணனிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
சமாளிச்சித் தான் ஆகணும். வேற வழி இல்லை. பையன் படம் பண்றாரு. இரண்டு பேரும் இருந்து வாழ்த்துற மாதிரி ஒரு ஸ்டில், எக்ஸ் தளத்துல பையனை வாழ்த்துறதுன்னு ஏதோ ஒரு பதிவு போடலாம்.
வில்லனுக்கு பேரு சஞ்சய்
இன்னைக்கு உதயநிதி அப்பாவுக்கு எக்ஸ் தளத்துல மெசேஜ் போடுறாரு. அப்படின்னா இந்த அரசியல் களத்துல இதெல்லாம் தேவைப்படுது. சொல்லி இருந்தா இவ்வளவு பேச்சு வராது. கோட் படத்துல வில்லனுக்கு பேரு சஞ்சய். அப்படின்னா அந்தப் பேரையாவது தவிர்க்கணும். அப்போ ஏதோ ஒண்ணு அவங்களுக்குள்ள இருக்குது. அது இல்லாம இருந்தா நல்லது. எப்பவுமே அரசியல் வேறு. குடும்பம் வேறு என இருந்த காலம் எல்லாம் மலையேறிப் போச்சு.
சின்ன சின்ன ஓட்டை
எம்ஜிஆர் காலத்துல இருந்து அவரோட இன்னொரு முகத்தைப் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அப்படிப்பட்ட சூழல்ல இந்த மாதிரி சின்ன சின்ன ஓட்டையை எல்லாம் அடைக்க முடியலன்னா எப்படி? நாளைக்கு பெரிய பிரச்சனை வரும். நிச்சயமா வரும். அன்னைக்கு விஜய் யாரு என்னன்னு எல்லாம் பேசுவாங்க. இதெல்லாம் சாதாரண விஷயம். அப்பா மகன் உறவு ரொம்ப அலாதியானது.
பட பூஜை
அதை எல்லாம் வெளிப்படுத்தி இருக்கணும். அவரு பட பூஜை நடக்கும்போது சர்ப்ரைஸா வர்றது எல்லாம் பண்ணிருக்கணும். இந்த மாதிரி நேரங்கள்ல இப்படி ஒரு கேள்வி நம்மை நோக்கி வரும் என்பது விஜய்க்குத் தெரிந்து இருக்க வேண்டும். முடிஞ்ச அளவு எதெல்லாம் சரி பண்ணனுமோ அதை எல்லாம் சரி பண்ணனும். ஆனா இதை ஏன் சரி பண்ணாம இருக்காருன்னு தெரியல.
விஜய் – அஜீத்
அஜீத்தை நாம் இழுக்கணும்கற எண்ணம் விஜய்க்கிட்ட இருக்கு. அஜீத் விஜய்க்கு எதிராக சரியாக இருப்பாருன்னு அவருக்கிட்ட ஒரு கூட்டம் சுத்திக்கிட்டு இருக்கு. அதிமுக, திமுக, ரஜினின்னு ஒரு பக்கம் சீமான்னு சுத்திக்கிட்டு இருக்காங்க. விஜய் முதல் மாநாட்டுலயே அஜீத்தோட வாய்ஸ்சைக் கொண்டு வரணும்னு நினைச்சாங்க.
Also read: ஆன்லைன் புக்கிங்கில் ரெக்கார்ட் பிரேக்கிங்!. அடிச்சி தூக்கிய புஷ்பா 2!….
ஆனா அது எப்படியோ முடியாமப் போச்சு. அதுக்கு விஜய் இடம் கொடுக்கலையான்னு தெரியல. ஆனா நிச்சயமா அதுக்கான முயற்சிகள் நடந்துக்கிட்டு இருக்கு. அடுத்த மாநாட்டுல கூட வரலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.