இணையத்தில் லீக் ஆன ‘தளபதி 66’ பட விஜய் லுக்!.....! ப்ப்பா தளபதி எப்போதும் ஸ்மார்ட்தான்.!

by Manikandan |
இணையத்தில் லீக் ஆன ‘தளபதி 66’ பட விஜய் லுக்!.....! ப்ப்பா தளபதி எப்போதும் ஸ்மார்ட்தான்.!
X

தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, தனது 66வது திரைப்படத்தை நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், ஷியாம், பிரபு, சரத்குமார், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்களேன் - வாஸ்து சரியில்ல.. லோகேஷ் போன இடத்துக்கு நானும் போறேன்.! நடையை கட்டிய நெல்சன்.!

விஜய்யின் சமீபத்திய திரைப்படங்கள் போல ஆக்சன் கமர்ஷியல் படங்களில் இருந்து வித்தியாசப்பட்டு குடும்ப திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறதாம். இப்படத்தில் விஜய் எந்த மாதிரியான இருக்கிறார் என்பது தற்போது வரை தெரியாமல் இருந்து வந்தது.

rashmika

ஆனால், தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக விஜய்யின் புதிய லுக் வெளியாகியுள்ளது. அதில் தலைவா படத்தில் விஜய் எப்படி இருந்தாரோ அதே போல் ஹேர் ஸ்டைலில் விஜய் இருக்கிறார். இன்னும் அப்படியே இளமை மாறாமல் இருக்கும் இந்த விஜயின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Next Story