அந்த நடிகர் ரிஜெக்ட் பன்ன கதையில்தான் விஜய் நடிக்கிறார்!.. இது தெரியாம போச்சே!.....
மாஸ்டர் படத்திற்கு பின் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் 4ம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் துவங்கியுள்ளது.
இந்த படத்திற்கு பின் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் பிரம்மாண்டமான திரைப்படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் உருவாகவுள்ளது. இப்படத்தை ‘தோழா’ படத்தின் இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இப்படத்திற்காக மட்டுமே விஜய்க்கு ரூ.100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு என்கிறது தெலுங்கு சினிமா வட்டாரம். அதாவது, இயக்குனர் வம்சி இந்த கதையை முதலில் மகேஷ்பாபுவிடம்தான் கூறினாராம்.
ஆனால், இது போன்ற கதைகளில் நான் ஏற்கனவே நடித்துவிட்டேன் எனக்கூறி அந்த கதையை ரிஜெக்ட் செய்துள்ளார் மகேஷ்பாபு. எனவேதான், விஜயை சந்தித்து இந்த கதையை கூறுங்கள் என தயாரிப்பாளர் தில் ராஜூ கூற அதன்பின்னரே வம்சி - விஜய் சந்திப்பு நடந்துள்ளது.
அவர் கூறிய கதை விஜய்க்கு பிடித்துப்போக தற்போது அப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளது. இப்படம் தொடர்பாக சில முக்கிய தகவல் இருக்கிறது. விஜய் தெலுங்கில் நடிக்கும் முதல் திரைப்படம் இது. ஏற்கனவே மகேஷ்பாபு நடித்த ஓக்கடு தமிழில் கில்லியாக உருவானது.
அதேபோல், விஜய் நடித்த போக்கிரி படமும் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த படத்தின் ரீமேக்தான். எனவேதான்,மகேஷ்பாபுவுக்காக உருவான கதையில் விஜய் விரும்புவது தெரிகிறது.
இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தெலுங்கில் பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருபவர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தையும் அவர்தான் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.