Connect with us
udhayanithi-vijay

Uncategorized

உதயநிதிக்கு போன் செய்த விஜய்… 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் கூட்டணி….

நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என் மிகவும் பிசியாக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது தான் நடிகராக உள்ளார். ஆரம்ப காலத்தில் இவர் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வந்தார். அதன் பின்னரே நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது உதயநிதி மீண்டும் படங்களை தயாரிக்க உள்ளாராம். அதுவும் விஜய் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் தான் உதயநிதியிடம் படங்களை தயாரிக்குமாறு ஐடியா கூறினாராம். அதன் பின்னரே உதயநிதி ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்க தொடங்கினார். இவரது தயாரிப்பில் வெளிவந்த முதல் படமே விஜய் படம் தான். கடந்த 2008ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தை உதயநிதி தான் தயாரித்திருந்தார்.

vijay-trisha

vijay-trisha

விஜய், த்ரிஷா, விவேக் நடிப்பில் உருவாகி இருந்த இப்படத்தை தரணி இயக்கி இருந்தார். இதனை தொடர்ந்து தான் ஆதவன், 7ஆம் அறிவு, மன்மதன் அன்பு உள்ளிட்ட படங்களை அந்நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில், நடிகர் விஜய் படத்தை மீண்டும் உதயநிதி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி நடிகர் விஜய் உதயநிதிக்கு போன் செய்து இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ணலாம் என கேட்டு கொண்டாராம். உதயநிதியும் இந்த கோரிக்கையை ஏற்று கொண்டதாக தெரிகிறது. எனவே தளபதி 67 அல்லது 68 படத்தை உதயநிதி தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். எனவே இந்த படங்களை முடித்த பின்னர் விஜய் – உதயநிதி இணைய வாய்ப்பு இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in Uncategorized

To Top