
Cinema News
20 வருடத்தில் இரண்டரை மணி நேரத்திலேயே விஜயை சம்மதிக்க வைத்த ஒரே இயக்குனர் இவர்தான்.!
தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தை முடித்துவிட்டு, அடுத்து அவரது 66வது திரைப்பட வேலைகளில் பிசியாக ஈடுபட்டு வருகிறாராம். மார்ச் மாத இறுதியில் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை தெலுங்கு சூப்பர் ஹிட் இயக்குனர் வம்சி இயக்குகிறார்.
இந்த படத்தை தெலுங்கு முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளதாம். தன்னுடைய ஆக்சன் கதைகளை பார்முலாக்களில் இருந்து விலகி இந்த படத்தில் விஜய் நடிக்க உள்ளாராம்.
இப்பட தயாரிப்பாளர் முன்னர் கூறுகையில் விஜய் இதுவரை கேட்ட கதைகளில் இதுதான் சிறந்த கதை என விஜய் கூறியதாக தயாரிப்பாளர் கூறினார். தற்போது அதே போன்ற, அதனை உறுதிப்படுத்தும் சம்பவம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்களேன் –ஊர் ஊராய் சுற்ற கிளம்பிய ஹீரோ.! இவருக்கு வேறு வழி தெரியல போல.!
அதாவது, விஜயிடம் ஒரு கதை கூறி அதனை உறுதி செய்வதற்குள் இயக்குனர்களுக்கு போதும் போதும் என்றாகிவிடுமாம். முதலில், ஒரு வரி கதை, அடுத்து சில காட்சிகள், அடுத்து இரண்டாம் பாதி என கதை கேட்பாராம். பெரும்பாலான படங்களுக்கு இதுதான் நிலைமை என கூறுகிறார்கள்.
மாஸ் ஹீரோ இடத்தை தக்கவைப்பது என்றால் சும்மாவா.? ஆனால், வம்சி இந்த கதையை ஒரேடியாக இரண்டரை மணி நேரத்தில் கூறி முடித்துவிட்டாராம். அந்த கதை உடனடியாக பிடித்துப்போகவே, உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இதுவரை விஜய் கதை கேட்டு உடனே ஓகே சொன்னது இல்லையாம். எப்படியும் ஒரு வாரம் ஆகுமாம். ஆனால் இந்த படம் விஜய்க்கு மிகவும் பிடித்துப்போனதாம்.