தளபதி 66 பட கதை இதுதான் - அட இது செமயா இருக்கே!....
விஜய் தற்போது டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது விஜய்க்கு 66வது திரைப்படமாகும். இப்படம், தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் கதை வெளியயே கசிந்துள்ளது. எரோடோமேனியா என்கிற நோயால் பாதிக்கப்பட்டவராக விஜய் நடிக்கவுள்ளாராம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்கள் தங்களை நேசிக்கிறார்கள் என நினைத்து கொள்வார்களாம்.
குறிப்பாக தனக்கு தெரிந்த் ஒரு பெண் தன்னை விரும்புவதாக ஒரு ஆண் கற்பனை செய்து கொண்டால் என்னவாகும்?. இப்படி ஒரு சுவாரஸ்யமான கதையில்தான் விஜய் நடிக்கவுள்ளாராம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட விஜய்க்கு என்ன நேர்கிறது? அவர் அதை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை என செய்திகள் லீக் ஆகியுள்ளது.
அதோடு, விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் செண்டிமெண்ட், அதிரடி சண்டை காட்சிகள் எல்லாமே படத்தில் இடம் பெற்றுள்ளது. இப்படத்தில் 2 பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைக்கவுள்ளது கூடுதல் தகவல்