Categories: Cinema History Cinema News latest news

என்னது குஷி படத்துல விஜய் நடிக்கலையா… எஸ்.ஜே.சூர்யா செய்த தில்லாலங்கடி… ஆஹா!

Kushi: விஜய் நடிப்பில் உருவான குஷி படத்தில் அவரே நடிக்காமல் ஆனால் அவர் நடித்த சில காட்சிகள் படத்தில் இருக்கிறது எனக் கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? அட உண்மை தாங்க. இதுகுறித்த சுவாரஸ்ய தகவலை அந்த படத்தில் பணிபுரிந்த நடிகரே சொல்லி இருக்கிறாராம்.

பெரிய வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த விஜயிற்கு வரமாக அமைந்த திரைப்படம் தான் குஷி. 2000ம் ஆண்டு வெளியான இப்படத்தினை எஸ். ஜே. சூர்யா எழுதி இயக்கினார். ஏ. எம். ரத்னம் தயாரித்த இப்படத்தில் விஜய், ஜோதிகா, விஜயகுமார், விவேக் மற்றும் நிழல்கள் ரவி நடித்துள்ளனர். 

இதையும் படிங்க: அப்பனுக்கு சளைச்சவன் இல்லனு காட்டிட்டாரு! ஜேசன் விஜயின் மாஸ்டர் ப்ளானில் இணைந்த நடிகர்கள்

சரி விஷயத்துக்கு வருவோம். பெங்களூர் ஷூட்டிங் எடுக்க வேண்டி இருந்து இருக்கிறது. விஜய் சென்னையில் இருந்து வந்துகொண்டு இருக்க, ஜோதிகா உயிரிலே கலந்தது ஷூட்டிங்கில் இருந்து இருக்கிறார். உடனே சூர்யா தன்னுடைய அசோசியேட் இயக்குனரான ரவி மரியானை அனுப்பி அழைத்து வர சொல்கிறார்.

ரவி மரியானும் அந்த ஷூட்டிங்கிற்கு நேராக சென்று விஷயத்தினை சொல்லி ஜோதிகாவை அழைத்து வந்துவிட்டார். ஆனால் விஜய் வர இன்னமும் நேரம் எடுக்கும் என தகவல்கள் வருகிறது. படக்குழுவிற்கு இந்த நேரத்தில் ஒரு ஐடியா கிடைக்கிறதாம்.

இதையும் படிங்க : இவரே சோலிய முடிச்சுருவார் போலயே! வாண்ட்டடா போய் பாதாளத்தில் விழும் சூரி – ஆட்டுவிப்பது இவராச்சே

சில லாங் ஷாட்களை விஜயிற்கு பதில் ரவி மரியானை வைத்து எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதில் அவர் பதறி இல்ல சார் இருக்கட்டும் என ஜெர்க் அடிக்க சூர்யாவே இதன் சரி நடி போ என அனுப்பி விடுகிறார். அவரும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போதே விஜய் தடாலடியாக உள்ளே நுழைந்து விடுகிறார். இதில் படக்குழு அதிர்ந்தாலும் அவர் எதையும் கேட்கவே இல்லையாம். உடனே விஜயை வைத்து அடுத்தகாட்சிகள் படமாக்கி விட்டனர்.

ப்ரேக்கில் அவரிடம் சென்ற ரவி மரியான் சார் அந்த காட்சிகளை எல்லாம் நீக்க சொல்லிடுறேன் என பவ்யமாக சொல்லி இருக்கிறார். ஆனால் விஜய் சிரித்துகொண்டே நீங்களும் என்ன மாதிரி தான் இருக்கீங்க. அதெல்லாம் நீக்க வேண்டாம் எனச் சொல்லிவிட்டாராம்.

Published by
Akhilan