Connect with us
vijay

Cinema History

அப்பா கஷ்டப்படுவதை பார்த்த விஜய்!.. அதனாலதான் அந்த விஷயத்துல அப்படி இருக்காராம்!…

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். ரஜினி, விஜயகாந்த் உள்ளிட்ட பலரையும் வைத்து திரைப்படங்களை இயக்கியவர். தான் இயக்கும் திரைப்படங்களில் புரட்சிகரமான கருத்துக்களை வைப்பதால் இவரை புரட்சி இயக்குனர் எனவும் கூறுவார்கள். இவரின் மகன் விஜய் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். துவக்கத்தில் இதில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு விருப்பம் இல்லை என்றாலும் விஜய் பிடிவாதமாக இருந்ததால் அவரை ஹீரோவாக வைத்து படம் இயக்கினார்.

vijay1
vijay sac

துவக்கத்தில் விஜய் நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் மெல்ல மெல்ல மற்ற இயக்குனரின் படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறி தற்போது பெரிய ஸ்டாராக உருவெடுத்துள்ளார். இவரை தளபதி என ரசிகர்கள் அழைக்கிறார்கள். மேலும், சூப்பர்ஸ்டார் எனவும் அவரை பேச துவங்கிவிட்டனர்.

விஜய்க்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு இயக்குனரிடம் கதை கேட்கும்போது இடையில் குறுக்கிடாமல் பொறுமையாக கேட்பார். அவருக்கு தேவை என தோன்றும் சில மாறுதல்களை சொல்வார். இயக்குனரும் அதற்கு சொல்லிவிட்டால் அவ்வளவுதான். அதன்பின் கதைகளில் தலையிட மாட்டார். படப்பிடிப்பு சென்றால் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடிப்பார்.

இதுபற்றி முன்பு ஒரு பேட்டியில் பேசிய விஜய் ‘என் அப்பா ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பிலிருந்து வீட்டுக்கு வந்த பின் டென்ஷனாகவே இருப்பார். இந்த நடிகர் படப்பிடிப்பு சரியாக வரவில்லை. நாளை அந்த நடிகர் வருகிறாரா என தெரியவில்லை. அந்த நடிகர் கதையில் தலையிடுகிறார் என புலம்புக் கொண்டே இருப்பார். எனவே, நான் நடிகனான பின் இயக்குனர்களுக்கு பிடித்தமான நடிகனாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அதையே பின்பற்றி வருகிறேன்’ என கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top