விஜய் எனக்கு நண்பர் எல்லாம் இல்லை!… அது எனக்கு ரொம்ப கஷ்டம் தான்… ஓபனாக பேசிய பிரசாந்த்…

Published on: February 27, 2024
---Advertisement---

Prasanth: தமிழ் சினிமாவில் விஜய்க்கு போட்டியாக முதலில் இருந்தவர் நடிகர் பிரசாந்த் தான். ஆனால் அவரின் கெட்ட நேரமோ என்னவோ சினிமா கேரியர் மொத்தமாக சறுக்களை சந்திக்க தற்போது விஜயின் கோட் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். 

இதையும் படிங்க: தக் லைஃபில் நான் கேமியோ ரோல் தான்… உண்மையை உடைத்த ஜெயம் ரவி… ஆனா அதுக்கு காரணம் என்ன தெரியுமா?

முதல் படமே நல்ல ரீச்சை கொடுக்க ரசிகர்களிடம் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக்  கொண்டார். தொடர்ந்து செம்பருத்தி திரைப்படத்தில் நடித்தவருக்கு கோலிவுட்டில் ஒரு தனி இடமே உருவானது. இதே நேரத்தில் தான்  இன்னொருபுறம் விஜய் வளர்ந்து வந்து கொண்டிருந்தார். ஆனால் விஜயை விட பிரசாந்துக்கு கிடைத்த திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதில் திருடா திருடா,  ஜீன்ஸ்,  ஜோடி உள்ளிட்ட திரைப்படங்கள் இன்றைய அளவில் ரசிகர்களிடம் பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்று கொடுத்திருக்கிறது. திடீரென திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரசாந்த் கோலிவுட்டில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவானது. பின்னர் சில வருடங்கள் கழித்து திரும்பி வந்தவரால் தன்னுடைய இடத்தை மீண்டும் அடைய முடியவில்லை.  இருந்தும் ஹீரோவாகவே நடிக்க வேண்டும் என்ற முடிவில் அவர் நடிப்பில் அந்தகன் திரைப்படம் உருவானது. 

இதையும் படிங்க: கவுண்டமணி காமெடியில் கலக்கிய காமெடி நடிகர்!… கடைசிக்கட்ட வாழ்க்கையில் இவ்ளோ சோகமா?!..

மோகன் ராஜா இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அப்படம் இன்னமும் ரிலீஸ் செய்யாமல் முடங்கி கிடக்கிறது.  இதைத் தொடர்ந்து கோட் திரைப்படத்தில் ஒரு முக்கிய இடம் ஏற்றிருக்கிறார் பிரசாந்த். இதற்கு முன்னர் ஒரு பேட்டியில் தமிழ் படத்தில் நடிப்பது குறித்து கேள்வி கேட்டபோது இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறோம் என பதில் சொல்லியிருப்பார்.

அந்த பதில் வைரல் ஆன நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் நண்பர் விஜய் என ஒரு செய்தியாளர் குறிப்பிட்டபோது என் சகோதரன் என்று சொல்லுங்கள் எனவும் கூறினார். பின்னர் ஷூட்டிங் ஸ்பாட்டில் உங்களுடன் விஜய் இருக்கும்போது அரசியல் குறித்து எதுவும் பேசி இருக்கிறாரா என்று கேட்ட கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு ரொம்ப சாதுரியமாகவே இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்வதை எப்படி என்னால் பொதுவெளியில் சொல்ல முடியும்.  அது ரொம்ப கஷ்டமான விஷயம் தானே என மழுப்பி விட்டார். விஜய் ரசிகர்களிடம் பகையை சந்தித்து விடுவோமோ என்ற பயத்திலே பிரசாந்த் தற்போது பிரச்னையை சுமூகமாக்கி இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எவ்ளோ பெரிய ஹீரோனாலும் இந்த நடிகையின் ஷாட்தான் ஃபர்ஸ்ட்.. அந்தளவுக்கு ராசியான நடிகை யார் தெரியுமா?

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.