வளர்த்துவிட்டவரை மறந்து திசை தேடி திரியும் விஜய்!.. மேலிடத்தில் இருந்து வரும் பிரஷர்?..என்ன செய்யப் போகிறார்?..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் விஜய் எந்த அளவுக்கு உயரத்தின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். சமீபத்தில் அம்பேத்கர் ஜெயந்தி விழாவில் தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பில் நடந்த சம்பவத்தை பற்றி தான் வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.
அதாவது அரசியலில் அந்த நாற்காலியில் உட்கார வேண்டும் என விரும்பும் விஜய் நேரிடையாக வந்து அல்லவா அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் பரபரப்பாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிக்க தன் தொண்டர்களை அறிவுறுத்திய விஜயின் இந்த செயலை பற்றி மறுநாள் எந்த அறிவிப்பும் வரவில்லை. அதற்கு காரணம் விஜயின் அறியாமையால் வந்த செயல் தானாம்.
சினிமாத் துறையில் மிகப்பெரிய அந்தஸ்தை கொண்ட நடிகர் நேரிடையாக வந்து இந்த செயல்களை செய்திருந்தால் இன்னும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் கூடியிருக்கும். அதுவும் ஒரு விதத்தில் அரசியலில் குதிக்க மேலும் ஒரு வழிமுறையாக கூட இருந்திருக்கும் என கூறினார்.
அதுமட்டுமில்லாமல் தன் குட்டிகளை ஏவி ஆழம் பார்க்கும் விஜய் அரசியலில் தன் காலடி எடுத்து வைக்க விரும்பினால் வெளியில் என்ன நடக்கிறது? நம் குரலும் ஒலிக்க வேண்டும் என நினைத்திருக்க வேண்டும். இப்போது பட்டினம்பாக்கம் கடற்கரை மீனவர்களின் போராட்டம் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. அந்த மீனவர்கள் அதிகம் வசிக்கும் ஏரியாவான நீலாங்கரையிலேயே வசிக்கும் விஜய் அவர்களுக்காக ஒரு நாளாவது குரல் கொடுத்திருப்பாரா? என்றும் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
அதே போல் இந்தியாவிலேயே எனக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்பதை போன்ற ஒரு செல்பி புகைப்படத்தை நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த விஜய் அதே நெய்வேலியில் நிலங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பாரா? அனைத்து அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்த நிலையில் விஜய் மட்டும் அமைதியாக இருந்தார்.
இப்படி எல்லாம் இருக்கும் விஜய் அரசியலில் வந்து என்ன செய்யப்போகிறார் என்று கூறினார். மேலும் அந்த காலத்தில் திமுகவை பிளவுபடுத்த எம்ஜிஅரை தேசிய அரசு தூண்டிவிட்டதன் பேரில் திமுகவிடம் கணக்கு கேட்ட எம்ஜிஆரை கட்சியிலிருந்து விலக்கியது திமுக அரசு. அதிலிருந்து தனியாக கட்சியை ஆரம்பித்து மாபெரும் சக்தியாக உருவெடுத்தார் எம்ஜிஆர்.
இதையும் படிங்க : சின்ன பையன் கூட எல்லாம் படம் நடிக்க முடியாது!.. விஜயை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா ராய்!..
அதே மாதிரி தான் விஜயையும் பயன்படுத்த இருக்கிறார் அண்ணாமலை. இரு பெரும் கட்சிகளை பிரித்து விஜயின் உதவியோடு மத்திய ஆளும் அரசை தமிழ் நாட்டிலும் நுழைக்க திட்டமிடுகிறார் அண்ணாமலை என்றும் அந்தனன் கூறினார். இதையெல்லாம் தாண்டி தன்னை வளர்த்து விட்ட விஜயகாந்தை இன்னும் விஜய் போய் பார்க்கக் கூட இல்லை. அன்று அவர் மட்டும் செந்தூர பாண்டி படத்தில் நடிக்க வில்லை என்றால் விஜயின் நிலைமை என்னாயிருக்கும்? யோசித்தாரா விஜய்? இன்று உடல் நிலை சரியில்லாத விஜயகாந்தை அவ்வபோது நடிகர்கள் சந்தித்து வரும் நிலையில் விஜய் இப்படி இருப்பது நியாமே இல்லை என்றும் அவர் சென்று பார்த்தால்தான் விஜய் மீது மக்கள் மத்தியில் இன்னும் மரியாதை அதிகமாகும் என்றும் அந்தனன் கூறினார்.