வரட்டும்பா நம் நண்பர் தான!.. ‘துணிவு’ படத்தின் ரிலீஸ் பற்றி வெளிப்படையாக கூறிய விஜய்!...

by Rohini |
ajith_main_cine
X

ajith vijay

விஜய், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் வருகிற பொங்கல் அன்று நேரிடையாக மோத உள்ளன. இது தான் இப்போதைக்கு தமிழ் சினிமாவில் பயங்கர எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளன. ரசிகர்களும் சரி பிரபலங்களும் சரி இந்த இரு படங்களின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ajith1-cine

ajith vijay

எச்.வினோத் இயக்கியுள்ள துணிவு படம் பக்கா ஆக்‌ஷன் படமாக ஒரு வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கதையாகும். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க ஜிப்ரன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மஞ்சிமா மோகன் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படம் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் ஒரு குடும்ப கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் தில் ராஜு வாரிசு படத்தை தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

ajith2_cine

ajith vijay

துணிவு படத்தை பற்றி இதுவரை எந்த ஒரு வித அப்டேட்ஸும் வராத நிலையில் வாரிசு படத்தின் இரண்டு சிங்கிள்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. வெளியான இரண்டு பாடல்களுமே சும்மா தெறிக்க விட்டு வருகின்றன. இந்த நிலையில் வாரிசு படத்தில் நடித்த நடிகர் ஷியாம் ஒரு பேட்டியில் வாரிசு மற்றும் துணிவு படங்களின் ரிலீஸ் பற்றி பேசியுள்ளார்.

இதையும் படிங்க : ஒரு சீன் கேட்டு நடிக்க வந்த அஜித்…ஆனா அங்குதான் இருக்கு டிவிஸ்ட்..துணிவு உருவான கதை….

ajith3_Cine

shyam vijay

பொங்கல் அன்று துணிவு படம் வெளியாகிறது என்ற செய்தியை விஜயிடம் சொன்னதுமே வரட்டும்பா அதுவும் நம் நண்பர் படம் தான? இரண்டு படங்களுமே நல்ல வசூல் பெற வேண்டும் என கூறினாராம் விஜய். இதை ஒரு பேட்டியில் நடிகர் சியாம் தெரிவித்தார்.

Next Story