விஜயும் இல்ல ஷாருக்கும் இல்ல..! அட்லீ இயக்க போகும் அடுத்த சூப்பர்ஸ்டார்..!

Atlee: தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் எடுத்த எல்லா படமும் ஹிட் அடிக்கும். விமர்சன ரீதியாக கலாய்க்கப்பட்டாலும் இப்போதையே நேரத்தில் அட்லீ இயக்கத்தில் இதுவரை ரிலீஸான எந்த படமும் வசூல் ரீதியாக தோல்வியை தழுவவே இல்லை. இதில் ஜவான் படம் 1000 கோடி வசூலை தாண்டிவிட்டது.

தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக எண்ட்ரி கொடுத்தவர் அட்லீ. முதல் படத்திலேயே நல்ல அறிமுகம் அவருக்கு கிடைத்தது. ஆனா இது மௌனராகம் கதையால இருக்கு என பலர் விமர்சித்தனர். ஆனால் படம் வசூல் வெற்றி அடைந்தது. இரண்டாம் படமே தளபதி விஜயுடன்.

இதையும் படிங்க: நயன் சம்பளத்தில் 10 சதவீதம் கூட வசூலிக்காத அன்னப்பூரணி!.. இதுல லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் வேணுமாம்!..

மீனா மகள் நைனிகாவை விஜயின் மகளாக நடிக்க வைத்து தெறி படத்தினை இயக்கினார். விஜயின் கேரியரில் வேறு மாதிரி படமாக அமைந்தது. ஆனால் இங்கும் படம் சத்ரியன் படத்தின் கதை என பலரும் விமர்சித்தனர். ஆனால் இப்படமும் வசூலில் சக்கை போடு போட்டது. அடுத்த படமும் விஜயுடன் மெர்சல்.

அப்பா, இரண்டு மகன் என மூன்று விஜய். மூன்று கதாபாத்திரம் விஜயின் கேரியரில் அடுத்த மைல்கல். இங்கும் அபூர்வ சகோதரர்கள் என அதே கலாய். ஒரு கட்டத்தில் கமலே படக்குழுவை அழைத்து அந்த பட போஸ்டருக்கு முன் நிற்க வைத்து வாழ்த்தி அனுப்பியது வேறு சலசலப்பை உண்டாக்கியது. இதை தொடர்ந்தும், விஜய் அட்லீக்கு பிகில் படத்தினை இயக்கும் வாய்ப்பு கொடுத்தார்.

இதையும் படிங்க: இது கன்பார்ம்!..தளபதி68 பட டைட்டில் இதுதான்.. கமலுக்கு செம டஃபா இருக்குமே!…

தமிழ் தானே கண்டுப்பிடிக்கிறீங்க என ஹலிவுட்டில் உருவ அதையும் கண்டுப்பிடித்து கலாய்த்தனர் ரசிகர்கள். ஒரு கட்டத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படத்தினை இயக்கினார். அப்படம் ரிலீஸாகி வசூலில் மெகா ஹிட் அடித்தால் கலாய்க்கும் ரசிகர்கள் இன்னும் கலாய்த்து கொண்டு தான் இருக்கின்றனர்.

இருந்தும், அட்லீயின் அடுத்த பட அறிவிப்புக்கு எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. தற்போது அதுகுறித்து சில தகவல்கள் லீக்கானது. அதாவது அட்லீ அடுத்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜூனை இயக்க இருக்கிறாராம். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

 

Related Articles

Next Story