Connect with us
saravana store

நைட் பார்ட்டியில் கலந்துகொண்ட தளபதி விஜய்.. வைரலாகும் புகைப்படம்!

vijay-10

latest news

நைட் பார்ட்டியில் கலந்துகொண்ட தளபதி விஜய்.. வைரலாகும் புகைப்படம்!

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். ரசிகர்களால் இவர் செல்லமாக தளபதி என அழைக்கப்படுகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பெரும் வெற்றியடைந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதன்முறையாக விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்குப் பின் தற்போது விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தட்டுவருகிறார். இதுவரை இயக்குனராக மட்டுமே இருந்துவந்த செல்வராகவன் இப்படத்தின் மூலம் நடிகர் அவதாரமும் எடுத்துள்ளார். அதுவும் இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்க உள்ளார்.

சமீபத்தில் விஜய் நடித்த அனைத்து படங்களும் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. இதனால் இவரை வைத்து படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் பலரும் முன்வந்துள்ளனர். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு தயாரிப்பாளர்களும் இவர் வைத்து படத்தை தயாரிக்க போட்டி போடுகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் ஒரு ஹாலிவுட் அழகி – மனச இழுத்த தமன்னாவின் மாடர்ன் போஸ்!

இந்நிலையில், விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பாண் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் நடிகையாக நடிக்க ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், கியாரா அத்வானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் கடந்த 2012ல் நைட் பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. படம் வெற்றிபெற்றால் பார்ட்டி கொடுப்பது ஹிந்தி சினிமாவில் வழக்கமான ஒன்றுதான். அந்தவகையில் கடந்த 2012ல் பிரபு தேவா இயக்கத்தில் அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளியான படம் ரவுடி ரத்தோர்.

vijay-01-2

Thanks: vijay north FC

இது தமிழில் வெளியான சிறுத்தை படத்தின் ரீமேக் ஆகும். ஹிந்தியில் இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் ஒரு பாடல்காட்சியில் விஜய் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியையடுத்து மும்பையில் நடந்த இரவு பார்ட்டியில் அக்ஷய் குமார், சோனாக்ஷி, ஷாருக்கான் ஆகியோருடன் விஜய் கலந்துகொண்ட போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top