படத்துக்குத்தான் டைட்டில் வைக்க தெரியலைன்னா!.. கட்சிக்கு கூடவா?.. போட்டு பொளந்த பிரபலம்!..

Published on: February 3, 2024
---Advertisement---

நடிகர் விஜய் எந்த ஒரு பேக் அடிக்காமல் தைரியமாக தனது அரசியல் வருகையை உறுதி செய்து கட்சியின் பெயரையும் நேற்று அறிவித்து விட்டார். விஜய் அரசியலுக்குள் நுழைந்த நிலையில் அவரது படம் வெளியாகும் போது எந்த அளவுக்கு நெகட்டிவ் விட்டு இருக்குமோ அதைவிட பல மடங்கு நெகட்டிவ் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.

அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா விமர்சகர்கள் வரை பலரும் நடிகர் விஜயின் கட்சி பெயர் சரியில்லை என்றும் கட்சிப் பெயரில் பிழை உள்ளது என்றும் ஏகப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தொட்டால் பூ மலருமா?.. தொடப்பக்கட்டை தான் பறக்கும்.. என்ன இழவுடா இது.. வடக்குப்பட்டி ராமசாமி முடியல!

தமிழக வெற்றி கழகம் என நடிகர் விஜய் தனது கட்சிக்கு பெயர் வைத்திருக்கும் நிலையில், தமிழக முன்னேற்றக் கழகம் அல்லது தமிழக மக்கள் கழகம் என தெளிவான ஒரு சிந்தனையுடன் கட்சியின் பெயரை வைக்க வேண்டும் என்றும் டைட்டிலை ஃப்ளாப் போல வெற்றி கிடைத்தே ஆகவேண்டும் என எப்படி தனது ஆசையை மட்டுமே வெளிப்படுத்தி நடிகர் விஜய் கட்சிக்கு பெயர் வைத்திருக்கிறார் என வலைப்பேச்சு அந்தணன் சமீபத்து அளித்த பேட்டி ஒன்றில் போட்டு பொளந்து இருக்கிறார்.

அவரது வீடியோவை பார்த்து கடுப்பான ரசிகர்கள் நடிகர் விஜய் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்பதை தங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக மாறியுள்ள நிலையில், நீ வேற ஏன்யா கடுப்பு ஏத்திகிட்டு இருக்க என கமெண்ட் பக்கத்தில் படு கேவலமாக அந்தணனை அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கோட் பட சூட்டிங்கில் விஜய்!.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!.. தளபதி லுக் எப்படி இருக்குன்னு பாருங்க!..

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.