Connect with us

Cinema News

இன்னுமா விஜய்யை நம்பிட்டு இருக்கீங்க..? பச்ச புள்ளையா பேசிய அந்த மெகா ஹிட் இயக்குனர்.!

தளபதி விஜய் தனது ஆரம்ப காலகட்டத்தில் புது முக இயக்குணர்க்கு அதிக வாய்ப்பு கொடுத்தவர். கடைசியாக, ஒரு படம் இயக்கிய அட்லீக்கு தனது படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தவர் விஜய். விஜய் அறிமுகப்படுத்திய இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பேரரசு.

பேரரசு இயக்கிய முதல் படம் திருப்பாச்சி. இந்த திரைப்படம் விஜய்க்கு  மிக பெரிய ஹிட் படமாக அமைந்தது. ஆதனால், மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் பேரரசு. அந்த திரைப்படம் தான் சிவகாசி.

திருப்பாச்சி அளவுக்கு மிக பெரிய ஹிட் இல்லை என்றாலும், ஒரு சூப்பர் ஹிட் படம் தான் சிவகாசி. ஆனால், அதன் பிறகு அவர் எடுத்த எந்த படங்களும் இந்த வெற்றிகளை பெறவில்லை. அஜித்தின் திருப்பதி உட்பட.

இதையும் படியுங்களேன் – தமிழில் ஒரு இங்கிலிஷ் படம்… சியான் விக்ரமின் தரமான சம்பவம் விரைவில்… மிரட்டும் கோப்ரா ட்ரைலர் வீடியோ…

சமீபகாலமாக அவர் படம் இயக்க , விஜயிடம் கதை சொல்லி இருந்தததாக தகவல்கள் வெளியாகின. அதனை அவரே பல இடங்களில் கூறியுள்ளார். அண்மையில் கூட அவர் சென்று கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் மீண்டும் எப்போது விஜயை வைத்து படம் இயக்குவீர்கள் என கேட்டவுடன், பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கு சீக்கிரம் சொல்லுவாங்க என்பது போல சென்றுவிட்டார்.

இதையும் படியுங்களேன் –  எனக்கு அந்த விருதே வேண்டாம்.. கடுப்பில் சூர்யா.! பெரிய சிக்கலில் தேசிய விருது குழு.!

இதனை எல்லாம் கவனிக்கும் சினிமாவாசிகள் , விஜய்க்கு தற்போது இருக்கும் மார்க்கெட் நிலைக்கு, மீண்டும் பேரரசு இயக்கத்தில் நடிப்பது சாத்தியமில்லாத ஒன்று. பேரரசு இயக்கும் படத்தில் நடிக்க விஜய் தயாராக இருந்தாலும், ரசிகர்கள் தயாராக இல்லை என்பதே உண்மை என கூறிவருகின்றனர். ஒரு வேலை, அதனை எல்லாம் திருப்பதி படுத்துகிற மாதிரி ஒரு கதை அமைந்தால் ஓகே என்கிறன்றனர் பலர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top