Leo Vijay: விஜய் தற்போது அரசியல் எண்ட்ரியால் தனக்கு இருக்கும் பிரச்னைகளை எல்லாம் முடிவு கட்டும் முடிவில் இருப்பதாகவும் வரிசையாக ஒவ்வொன்றாக கிளியர் செய்யவும் தன்னுடைய டீமுக்கு சொல்லி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதிலும் ஆடியோ லாஞ்சில் நிறைய சர்ச்சைகளுக்கு முடிவு கட்டுவார் என்றே தெரிகிறது.
விஜய் நடிப்பில் லியோ படத்தினை முடித்த விஜய் தளபதி68 படத்தில் பிஸியாக விட்டார். ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய அரசியல் பிரவேசத்துக்குமான சில விஷயங்களையும் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் லியோ ஆடியோ ரிலீஸுக்கு எதிர்பார்ப்புகளும் அதிகரித்து இருக்கிறது.
இதையும் படிங்க:சொன்னது ஒண்ணு..செய்றது ஒண்ணு..எம்.எஸ்.வி மீது கடுப்பான கண்ணதாசன்..இப்படியா பழிவாங்குவாரு!..
ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியினை நடத்திய டீம் லியோ ஆடியோ ரிலீஸையும் நடத்த இருந்ததாக விஜயிடம் கூறப்பட்டது. ஏற்கனவே இருக்கும் பிரச்னையால் அவர்கள் நடத்தினால் இந்த நிகழ்ச்சியே வேணாம் என விஜய் மறுத்துவிட்டாராம். அதை தொடர்ந்தே லியோ படக்குழு சார்பிலே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது.
மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிரச்னைக்கும் ஆடியோ ரிலீஸில் விஜய் தரப்பில் இருந்து பதில் கொடுப்பார் என நம்பப்படுகிறது. கழுகு, காக்கா கதைக்கு விஜய் பதிலடி தருவார் எனப் பேச்சுகள் எழுந்த நிலையில் ரஜினிக்கு ஆதரவாக தான் விஜய் பேசுவார். இதனால் ரஜினி ரசிகர்களை பகைக்க வேண்டாம் என விஜய் திட்டமாக இருக்கிறது.
இதையும் படிங்க:ஒரே செகண்டில் உருவான பல்லவி… காலத்தால் அழியாத கண்ணதாசன் வரிகள்.. அட அந்த பாட்டா!…
மேலும் அரசியல் எண்ட்ரி குறித்து நேராகவும் தன்னுடைய குட்டி கதை மூலம் மறைமுகமாகவும் சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இப்போதில் இருந்தே என்ன நடக்கும் என்ற ஆவலில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
செப்டம்பர் 30ந் தேதி நேரு அரங்கில் லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் நடக்க இருக்கிறது. அதை தொடர்ந்து ட்ரைலரை புர்ஜ் கலிபாவில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு லியோ 30 நாள் 30 அப்டேட்டில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…