More
Categories: Cinema News latest news

விஜய் அரசியலால் கோட் படத்துக்கு சிக்கலா? தயாரிப்பாளர் சொல்வது என்ன?

வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 68வது படம் கோட். பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். தந்தை மகன் என இரு வேடங்களில் விஜய் நடித்து அசத்தியுள்ளார். படத்தில் ஏஐ, டீஏஜிங் ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

Also read: முதலில் இப்படிதான் சொன்னார்… ஆனால் கடைசியில் எங்களுக்கே ஷாக்… வெங்கட் பிரபு சொன்ன அதிர்ச்சி தகவல்

Advertising
Advertising

கேப்டன் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் வருகிறார். விஜய் இளவயது தோற்றத்தை டீஏஜிங் செய்து அபாரமாக எடுத்துள்ளார்களாம். இதெல்லாம் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.

தமிழக வெற்றிக்கழகத்தைத் தொடங்கி கட்சிக் கொடி, கொள்கைப்பாடல்னு ஜரூராக அரசியல் களத்தில் குதித்துள்ளார் தளபதி விஜய். இது எப்போ நடந்ததுன்னா கோட் படப்பிடிப்புக்கு இடையில் தான். இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருபவர் அர்ச்சனா கல்பாத்தி. இவர் இக்கட்டான சூழலை எப்படி சமாளித்தார்? இதனால் படத்துக்கு எதுவும் சிக்கலா? இவர் என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…

archana kalpathi

கோட் படத்தையொட்டி அரசியலில் விஜய் இறங்குவதாக அறிவித்தது உங்களுக்கு டென்ஷன் ஆச்சுதான்னு பிஸ்மி கேட்டார். அந்த நேரத்துல செலபரேட் பண்ணினோம். ஆனா உடனே சூட்டிங் ஆரம்பிச்சிட்டோம்னு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்தார்.

சிஎம் 2026 என்ற நம்பர் விஜயோட கார் நம்பரான்னு கேட்டதுக்கு அப்படி எல்லாம் இல்ல. நான் அதை எல்லாம் கவனிக்கலன்னு சொன்னார். விஜய் அரசியலில் இறங்குறதைப் பற்றி உங்கக் கிட்ட பேசினாரான்னு வலைப்பேச்சு பிஸ்மி கேட்டதுக்கு எங்கிட்ட பேசலன்னு சொன்னார். எனக்கு அவர் அறிவிச்சது டென்சன் இல்ல. இந்த அரசு மெச்சூரிட்டியானது.

அதை நாம கண்டிப்பா சொல்லியே ஆகணும். அவங்க வந்து அவங்களோட கனெக்சன், இன்டஸ்ட்ரி எல்லாமே ஸ்ட்ராங்கானது. அவங்க மிக்ஸே பண்ணிக்கல. எனக்கு அதுல நம்பிக்கை இருந்தது. அவங்க எப்பவுமே சினிமாக்கு எது நல்லதோ அதை என்கரேஜ் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v