விஜயின் கணக்கே வேற!.. இந்த நேரத்துல கண்டிப்பா அரசியலுக்கு வந்துருவாரு!.. சொல்கிறார் மூத்த பத்திரிக்கையாளர்..

by Rohini |
vijay
X

vijay

விஜயின் சினிமா வளர்ச்சியை பற்றி ஒருபக்கம் பேசிக் கொண்டிருந்தாலும் அவரின் அரசியல் பிரவேசமும் சுமூகமாக போய்க் கொண்டு தான் இருக்கின்றது. ஒரு பக்கம் விஜயின் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை ஆரம்பித்தி சிறியதாக ஒரு விதையை ஊன்றியிருக்கிறார் விஜய்.

vijay1

vijay1

அந்த இயக்கம் மூலம் மக்களுக்கு தேவையான நலன் உதவிகளை செய்து வருகிறார். மேலும் என்றைக்கும் இல்லாத அளவில் அவ்வப்போது தன் ரசிகர் மன்றச் செயலாளர்கள், மக்கள் இயக்கம் சார்ந்த தலைவர்கள் என அனைவரையும் கூட்டி கூட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்.

சொல்லப்போனால் சத்தமே இல்லாமல் காய் நகர்த்தி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இதை பற்றி பிரபல மூத்த பத்திரிக்கையாளரான ரெங்கராஜ் பாண்டே கூறும் போது ‘தமிழ் சினிமாவில் இருந்து போன இரண்டு பிரபலங்கள் அரசியலில் எப்படி ஜொலித்தார்களோ அதே வாய்ப்பு ரஜினிகாந்திற்கு தானாகவே கிடைத்தது.

vijay2

vijay2

ஆனால் இது சரிவராது என அவரே ஒதுங்கி விட்டார். ஆனால் கமல் இன்று வரை தன் கட்சியை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரால் நிலைத்து நிற்க முடியாது. ஏனெனில் மனதில் பட்டதை அப்படியே கூறுபவர் கமல். அரசியலுக்கு என்று ஒரு சூட்சமம் இருக்கிறது. அதை கமல் அறிந்து கொள்ள மாட்டார். அதனால் அவர் நிலைத்து நிற்பது என்பது கடினம்.

மேலும் கமலில் அண்ணனான சாருஹாசனே ஒரு சமயம் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்று கேட்பார்கள், ஆனால் கமலை எதற்கு அரசியலுக்கு வருகிறார் என்று கேட்பார்கள் என்று கூறியிருக்கிறார். ஆகவே கமலை எதிர்பார்க்க முடியாது. ஆனால் விஜய் கண்டிப்பாக வருவார். அவருக்கு ஆசை இருக்கிறது. அவர் ஒரு கணக்கு வைத்திருக்கிறார்.

vijay3

vijay3

தீர்க்கமாக யோசித்து சரியான விதத்தில் காய் நகர்த்தி கண்டிப்பாக வருவார். ஒரு 12 வருட காலத்திற்கு அவரால் சினிமாவில் கோலோச்ச முடியும். அதன் பிறகு அரசியலில் ஒரு வெற்றிடம் வரும். அந்த நேரத்திற்காகத் தான் காத்திருக்கிறார். மேலும் விஜய்க்கும் அவரது தந்தையான எஸ்.ஏ.சிக்கு இருக்கிற பிரச்சினையே ஏன் அரசியல் என்பதல்ல.

இதையும் படிங்க : முதல் படத்திலேயே முத்திரை பதித்த நடிகை!..மூன்று தீபாவளிகளை கடந்தும் வெற்றிகரமாக ஓடிய படம்!..

அவரது தந்தை இப்போது அரசியல் ஆரம்பிக்கலாம் என்கிறார். ஆனால் விஜய் கொஞ்சம் பொறுத்து அரசியலுக்குள் வரலாம் என்கிறார். அவ்ளோதான். மற்றபடி இருவருக்கும் அரசியல் பற்றிய பிரச்சினை வேறு எதுவும் இல்லை’ என்று விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி அழகாக கூறினார் ரெங்கராஜ் பாண்டே.

Next Story